உயிரோடு எரித்த‌ அதிகாரி! கடைசி நொடியில் பழிவாங்கிய பெண்காவலர்!

  11
  Kerala Police

  நிலைகுலைந்து கீழே கிடக்கும் சவுமியாமேல் கோவம் அடங்காதவன், வண்டியிலிருந்த மண்ணெணய் கேனை எடுத்து சவுமியாமேல் ஊற்றி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தீவைத்துவிட்டான். கொலை முயற்சியிலிருந்து தப்பிக்க முயன்ற சவுமியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. தனக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதை உணர்ந்த சவுமியா, சரேலென தாவி, கொலைகாரனை இறுக்கி பிடித்திருக்கிறார். எரியும் தீயுடன் சவுமியா தன்மேல் பாய்வார் என எதிர்பார்க்காத அவன்மீதும் தீ பற்றிப்பரவ, அலறி அடித்து ஓடியிருக்கிறான்.

  கேரள, ஆலப்புழாவில் காவல்துறையில் பணியாற்றிவரும் சவுமியா புஷ்கரன், இன்று பணி முடித்து தன் ஸ்கூட்டரில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஒரு திருப்பத்தில் அவருடைய ஸ்கூட்டர் மீது கார் ஒன்று மோத, சவுமியா கீழே விழுந்துவிட்டார். உடனே சுதாரித்து மெல்ல எழுந்து நின்று கார் ஓட்டிவந்தவனை திட்டிவிட்டு ஸ்கூட்டரை எடுக்க பார்த்திருக்கிறார். காருக்குள் இருந்தவன் வேகமாக கீழே இறங்கி, கையில் வைத்திருந்த கத்தியால் சவுமியாவை தாக்கியிருக்கிறான். கத்தி குத்துப்பட்ட சவுமியாவால் எழுந்து ஓட முடியவில்லை.

  Cop burnt alive

  நிலைகுலைந்து கீழே கிடக்கும் சவுமியாமேல் கோவம் அடங்காதவன், வண்டியிலிருந்த மண்ணெணய் கேனை எடுத்து சவுமியாமேல் ஊற்றி, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தீவைத்துவிட்டான். கொலை முயற்சியிலிருந்து தப்பிக்க முயன்ற சவுமியாவால் எதுவும் செய்ய முடியவில்லை. தனக்கு முடிவுரை எழுதப்பட்டுவிட்டதை உணர்ந்த சவுமியா, சரேலென தாவி, கொலைகாரனை இறுக்கி பிடித்திருக்கிறார். எரியும் தீயுடன் சவுமியா தன்மேல் பாய்வார் என எதிர்பார்க்காத அவன்மீதும் தீ பற்றிப்பரவ, அலறி அடித்து ஓடியிருக்கிறான். சவுமியா சற்று நேரத்தில் பரிதாபமாக உயிரிழக்கிறார். தீப்பற்றிய உடலுடன் ஓடிய கொலைகாரனை காவலர்கள் பிடித்து விசாரிக்கையில்தான் தெரியவருகிறது, அவனும் ஒரு ட்ராஃபிக் போலிஸ்காரன் என்று. உயிரிழந்த சவுமியாவிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கணவர் வெளிநாட்டில் வேலை பார்க்கிறார். தீவைத்த கொலைகாரன் அஜாஸ், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.