உயிரற்ற குழந்தையை புதைக்கும்போது கிடைத்த உயிருள்ள குழந்தை !

  0
  11
  cemetery

  உத்தர பிரதேசம் மாநிலத்தில் குறைப்பிரசவத்தில் இறந்த குழந்தையை புதைக்க குழி தோண்டியபோது உயிரோடு ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

  உத்தர பிரதேசம் மாநிலத்தில் குறைப்பிரசவத்தில் இறந்த குழந்தையை புதைக்க குழி தோண்டியபோது உயிரோடு ஒரு குழந்தை புதைக்கப்பட்டிருந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.

  உத்தர பிரதேச மாநிலத்தில் ஹித்தேஷ் குமார் சிரோஹி என்பவரின் மனைவிக்கு குறைப் பிரசவத்தில் அதாவது 7 மாதத்தில் ஒரு குழந்தை பிறந்துள்ளது. குறைப்பிரசவம் என்பதாலும், போதிய உடல் எடை இல்லாத காரணத்தாலும் பிறந்த சிறிது நேரத்திலேயே அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்துவிட்டது. இதையடுத்து இறுதிச் சடங்கு செய்த சிரோஹி குடும்பம் குழந்தையின் நல்லடக்கம் செய்ய ஆற்றங்கரை ஓரத்தில் உள்ள மயானத்திற்கு கொண்டு சென்றனர். அப்போது அங்கு பள்ளம் தோண்டிடும் நேரத்தில் ஏதோ ஒன்று கடப்பாறையில் தட்டுப்பட்டது. எது என்ன வென்று பார்க்க ஒரு மண்பானை இருந்தது. அது மட்டுமின்றி அந்த மண்பானைக்குள் மூச்சு திணறியபடி ஒரு பெண் குழந்தை உயிருக்கு போராடி கொண்டிருந்தது.  இதை பார்த்த அவர் அந்த குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். மண்பானையில் வைத்து பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைத்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  cemetery

  மீட்கப்பட்ட பெண் குழந்தை தற்போது நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை வேறு எங்காவது பள்ளம் தோண்டி இருந்தால் அந்த பச்சிளம் பெண் குழந்தையை காப்பாற்றி இருக்க முடியாது. கடவுளின் கருணைதான் காரணம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

  குழந்தையை உயிருடன் புதைத்தது யார், எப்போது புதைக்கப்பட்டது, புதைக்கப்பட்ட குழந்தை உயிருடன் இருபபது எப்படி, முறையற்ற உறவு விவகாரத்தில் பிறந்த குழந்தையை புதைத்து விட்டு சென்றனரா என பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.