உயர் மின் கோபுரம் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தம் !

  0
  3
  Tower

  தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும், பவர்கிரிட் நிறுவனமும் இணைந்து புதிதாக மின் இணைப்புகளை உருவாக்க உயர்மின் அழுத்தக் கோபுரங்களை 13 மாவட்டங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டது.

  தமிழ்நாடு மின் தொடரமைப்பு கழகமும், பவர்கிரிட் நிறுவனமும் இணைந்து புதிதாக மின் இணைப்புகளை உருவாக்க உயர்மின் அழுத்தக் கோபுரங்களை 13 மாவட்டங்களில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

  tower

  இதனால், விவசாய நிலங்கள் பறிபோகும் அபாயம் ஏற்பட்டதால் மின் கோபுரங்கள் அமைக்காமல் நிலத்தடியில் ஒயர்களை கொண்டு செல்லுமாறு பல்வேறு மாவட்டங்களில் உள்ள விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இருப்பினும், தமிழக அரசு உயர்மின் அழுத்தக் கோபுரங்களை அமைக்கும் நடவடிக்கையைக் கைவிடவில்லை. 

  tower

  இந்நிலையில், ஓசூரை அடுத்த சேவகானப்பள்ளி என்னும் கிராமத்தில் மட்டும் 16 மின் கோபுரங்கள் அமைப்பதற்கான நோட்டீஸ் விவசாயிகளிடம் கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று மின் கோபுரங்கள் அமைக்க பொக்லைன் இயந்திரங்களுடன் அதிகாரிகள் வந்துள்ளனர். இதனையறிந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

  MLA

  அதன் பின்னர், அப்பகுதி எம்.எல்.ஏ பிரகாஷ் அம்மாவட்ட ஆட்சியரிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு மின் கோபுரங்கள் அமைக்காமல், மின்சாரத்தை மாற்று வழியில் எடுத்துச் செல்லும் படி கேட்டுள்ளார். அதனால், மாற்று இடங்களைத் தேர்வு செய்யும் வரை கோபுரங்கள் அமைக்கக் கூடாது என்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கோபுரங்கள் அமைக்கும் பணி தாற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.