உயர்ந்தது தங்க விலை !

  0
  3
  Gold rate

  கடந்த 12 நாட்களில் தங்க விலை ரூ.664 குறைந்து ரூ.28,944 விற்கப்பட்டது.

  இந்த மாதம் துவங்கியதிலிருந்து ரூ.29,700க்கும் மேல் விற்கப்பட்டு வந்த மாறி மாறி தங்க விலை ஏற்றத்தையும் இறக்கத்தையும் சந்தித்து வந்தது. அதன் பின், கடந்த 3 ஆம் தேதி முதல் தங்க விலை குறையத் தொடங்கியது. கடந்த 12 நாட்களில் தங்க விலை ரூ.664 குறைந்து ரூ.28,944 விற்கப்பட்டது. இந்நிலையில், இன்று மீண்டும் தங்க விலை அதிகரித்துள்ளது. 

  Gold

  இன்றைய நிலவரத்தின் படி, தங்க விலை கிராமுக்கு ரூ.16 உயர்ந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.3,634க்கு விற்கப்படுகிறது. அதன் படி, தங்க விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத்தங்கம் ரூ.29,072க்கு விற்கப்படுகிறது. 

  மேலும், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.47.80 க்கு விற்கப்படுகிறது. அதன் படி, வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.300 உயர்ந்து ஒரு கிலோ வெள்ளி ரூ.47,800 க்கு விற்கப்படுகிறது.