உத்தர பிரதேசத்திலும் பிரபலமாகும் தமிழக போலீசின் கொரேனா வைரஸ் ஹெல்மெட்…. விழிப்புணர்வு ஏற்படுத்தும் உ.பி. சமூக சேவகர்

  0
  1
  கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும சமூக சேவகர்

  தமிழக போலீசின் கொரோனா வைரஸ் ஹெல்மெட் விழிப்புணர்வு யுக்தி தற்போது உத்தர பிரதேசத்திலும் பிரபலமாகி வருகிறது. அம்மாநிலத்தை சேர்ந்த சமூக சேவகர் ஒருவர் கொரோனா வைரஸ் ஹெல்மெட் அணிந்து, ஊரடங்கை மீறி வெளியே வருபவர்களை தடுத்து நிறுத்தி தொற்று நோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

  தொற்று நோயான கொரோனா வைரஸ்  வேகமாக பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு கடந்த 25ம் தேதி முதல் 3 வாரங்களுக்கு ஊரடங்கை அல்லது முடக்கத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், கொரோனா வைரஸின் ஆபத்தை உணராமல் சிலர் வீட்டை வெளியே வந்து சுற்றி திருகின்றனர். 

  கொரோனா ஹெல்மெட் அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி தமிழக போலீஸ்

  அதேசமயம் இவர்களை கட்டுப்படுத்த போலீசாரும் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் தமிழக போலீஸ் ஒருவர் தலையில் கொரோனா ஹெல்மெட் அணிந்து ஊரடங்கை மீறி சாலைகளுக்கு  வருபவர்களை தடுத்து நிறுத்தி கொரோனா வைரஸ் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி எச்சரிக்கை செய்தார்.

  விழிப்புணர்வு ஏற்படுத்தும் விஷேஷ் பால்

  தமிழக போலீசின் இந்த யுக்தி தற்போது உத்தர பிரதேசத்திலும் பிரபலமாகி உள்ளது. மொரதாபாத் நகரை சேர்ந்த  சமூக சேவகர் விஷேஷ் பால் தனது தலையில் கொரோனா வைரஸ் ஹெல்மெட் அணிந்தபடி, ஊரடங்கை மீறி வெளியே வரும் மக்களை தடுத்து நிறுத்தி கொரோனா வைரஸ் தொடர்பான ஆபத்துக்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இது குறித்து விஷேஷ் பால் கூறுகையில், ஒவ்வொருவரின் பாதுகாப்பை உறுதி செய்ய வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி மக்களிடம் முறையிடுகிறேன் என தெரிவித்தார்.