உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களுக்கு இன்று நள்ளிரவு முதல் சீல்!

  0
  1
  yogi

  கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இதன் காரணமாக ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ளது. 

  Uttar pradesh

  இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் 326 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 21 பேர் உயிரிழந்தனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 15 மாவட்டங்களை இன்று நள்ளிரவு முதல் முழுமையாக சீல் வைக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. லக்னோ,நொய்டா, காசியாபாத், மீரட், ஆக்ரா, ஷாம்லி மற்றும் சஹரன்பூர் உள்ளிட்ட  நகரங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 15 ஆம் தேதிவரை சீல் வைக்கப்பட்டுள்ளது. 

  கொரோனா வைரஸ் தொற்றுநோயைத் தடுக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு மட்டுமே வீடுகளை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.