உதவியாளர் திருமணத்திற்கு சொகுசு விமானத்தில் ஸ்டாலின் பயணம்? ட்விட்டரில் தமிழிசை கிண்டல்

  0
  30
  mk stalin

  திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு தனி விமானத்தில் சென்ற ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

  சென்னை: திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சேலத்திற்கு தனி விமானத்தில் சென்ற ஸ்டாலினை தமிழக பாஜக தலைவர் தமிழிசை ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார்.

  திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் உதவியாளர் தினேஷ் குமாரின் திருமணம், இரண்டு நாட்களுக்கு முன்னர் சேலத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் ஸ்டாலின், அவரது மனைவி துர்கா, மற்றும் முன்னாள் அமைச்சர் பொன்முடி ஆகியோர் சேலம் சென்றிருந்தனர்.

  dinesh kumar

  இந்த தகவலை வெளியிட்டுள்ள பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்று, அந்த விமானம் சன் குழுமத்திற்கு சொந்தமானது என சொல்லப்படுவதாக குறிப்பிட்டுள்ளது.

  mk stalin

  இந்நிலையில், அந்த செய்தியை தன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள தமிழக பாஜக தலைவர் தமிழிசை, “முதலமைச்சர் வெள்ளச்சேதங்களை பார்வையிட ஹெலிகாப்டரில் சென்றதை விமர்சித்த ஸ்டாலின் சேலத்தில் தன் உதவியாளர் இல்லத்திருமணத்திற்காக சொந்த சொகுசு விமானத்தில் பயணம்? ஏழை பங்காளர்கள்!” என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.