உதயநிதி போல கட்சி வெற்றிபெறும் போது நான் அரசியலுக்கு வரலை…

  0
  4
  விஜயபிரபாகரன்-உதயநிதி ஸ்டாலின்

  2020 தை பிறந்தால், கேப்டன் சிம்மக்குரலுடன் தமிழகம் முழுவதும் வலம் வருவார் என்றார். மேலும், தண்ணீர் பிரச்சனைப் பற்றி கேள்வி எழுப்பிய போது, தண்ணீரை அதிமுக உற்பத்தி செய்யவில்லை.

  இன்று திருச்சியில் நடைபெற்ற ஒரு காதணி விழாவில் கலந்து கொண்டு பேசிய விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், பேசியவை எல்லாமே அதிரடி ரகம் தான். ஆரம்பத்தில் வாரிசு அரசியல் பற்றி பேசிய விஜயபிரபாகரன், ‘உதயநிதியை போல் கட்சி வெற்றி பெறும் போது நான் அரசியலுக்கு வரவில்லை. கட்சி தொய்வில் இருக்கும் போது அரசியலில் ஈடுபட்டவன் நான்.

  விஜயகாந்த் நலமாக உள்ளர். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். 2020 தை பிறந்தால், கேப்டன் சிம்மக்குரலுடன் தமிழகம் முழுவதும் வலம் வருவார் என்றார். மேலும், தண்ணீர் பிரச்சனைப் பற்றி கேள்வி எழுப்பிய போது, தண்ணீரை அதிமுக உற்பத்தி செய்யவில்லை. மழை வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்று பொங்க  ஆரம்பித்தார்.  தேமுதிக வட்டாரத்திலும், சினிமா வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்திய விஜயகாந்த்தின் கல்லூரி மற்றும் வீடுகள் ஏல அறிவிப்பு பற்றிய கேள்விக்கு அவர் கூறுகையில், ‘ஊழல் செய்து நாங்கள் கடனாளி ஆகவில்லை. சொத்துக்களை அடமானம் வைத்து தான் கடன் பெற்றோம்’ என்று பதிலளித்தார்.