உதயநிதி கட்டுப்பாட்டின் கீழ் உருவாகவுள்ள இளம் பெண்கள் பேரவை!?

  0
  3
  உதயநிதி

  இளம் பெண்கள் பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது

  திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

  stalin

  திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்கு பிறகு திமுக தலைவராக ஸ்டாலின் செய்யப்பட்டு வருகிறார். அதை தொடர்ந்து அவரது மகன் உதயநிதியும் கட்சியில் களமிறக்கப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலில் திமுகவுக்காக தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட உதயநிதி சமீபத்தில் கட்சியின் இளைஞரணி செயலாளராகப் பதவியேற்றார்.மேலும் அனைத்து தரப்பு மக்களையும் கவர ஓயாமல் களப்பணியில் இறங்கியுள்ளனர் திமுகவினர்.

  udhay

  இந்நிலையில் திமுகவில் இளம் பெண்கள் பேரவை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. களத்தில் பணியாற்றக்கூடிய இளம் பெண்கள் 7 பேரை மாநில துணை செயலாளர்களாக நியமிக்க தேர்வு செய்து வருகின்றனர் என்றும் பேரவை உதயநிதியின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இம்மாதம் பேரவை தொடங்க இருப்பதாக திமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது.