உதயநிதியின் முதல் கனவை களைத்த எடப்பாடி… ஆனாலும் திமுக காட்டில் பண மழை..!

  0
  5
  உதயநிதி

  இப்போது, நேரடி தேர்தல் ரத்து என ஆளுங்கட்சி எடுத்த முடிவால், மேயர் கனவையே துாக்கி பரணில் போட்டுவிட்டார்.

  மேயர் கனவை துாக்கி கடாசி விட்டார் உதயநிதி ஸ்டாலின். மக்களவை தேர்தல் வெற்றியால், அப்பாவைப்போல தானும் சென்னை மேயராகி, பதவிக் கணக்கை துவங்க வேண்டும் என உதயநிதி நினைத்திருந்தார். 

  ஆனால், விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் கிடைத்த அடியால், லேசாக யோசிக்க ஆரம்பித்து விட்டார். இப்போது, நேரடி தேர்தல் ரத்து என ஆளுங்கட்சி எடுத்த முடிவால், மேயர் கனவையே துாக்கி பரணில் போட்டுவிட்டார்.

  edappadi

  கவுன்சிலர் பதவிக்கு நின்று மேயராவது குதிரை கொம்பு என்பதால் இந்த முடிவுக்கு வந்து விட்டார். அத்தோடு மற்ற கட்சிகளை விட தி.மு.க.வில் மாவட்ட, பகுதி, ஒன்றியச் செயலர்கள் பரிந்துரை செய்கிறவர்களுக்கு தான்  கவுன்சிலர் ‘சீட்’களை ஒதுக்குவார்கள். குறிப்பாக சென்னையில் பகுதிச் செயலர்கள் பரிந்துரை இருந்தால் தான், சீட் கிடைக்கும்.

  சென்னையில் பல பகுதிச் செயலர்கள், கவுன்சிலர் சீட்டுக்கு பரிந்துரை செய்வதற்கு வட்டச் செயலர்கள், மாவட்ட பிரதிநிதிகளிடம், தலா 2ல் இருந்து, 5 லட்சம் ரூபாய் வரைக்கும் வசூலிக்க ஆரம்பித்து விட்டார்கள். இது குறித்து ஸ்டாலினுக்கும் புகார்கள் போய் இருக்கிறது.