உதயநிதியால் கதறும் உ.பி.,கள்… ஸ்டார் ஹோட்டலில் வைச்சு செய்யும் வாரிசு..!

  0
  8
  உதயநிதி

  கட்சிகாரர்களிடம் பணத்தை கறந்து நட்சத்திர ஹோட்டல்களில் கட்சிக்கூட்டங்களை நடத்தி பணத்தை தண்ணீராய் விட்டெரிகிறார்.

  உதயநிதி கழகத்திற்கு வந்த பிறகு கட்சிக்காரர்களை கசக்கி பிழிந்து வருவதால் வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களாகி விட்டார்கள் உடன் பிறப்புகள். 

  தி.மு.க., கட்சி பத்திரிகைக்கையான முரசொலி அறக்கட்டளையின் அனைத்து பொறுப்புகளையும் தன் கைக்குள் வைத்திருப்பவர் மு.க.ஸ்டாலின்  மகன் உதயநிதி.

  udhayanidhi

  இவர் திமுக இளைஞரணி செயலாளர் பதவிக்கு வந்த பிறகுமுரசொலி ஆயுள் சந்தாவாக, ஒன்றிய நிர்வாகிகளிடம், 3 லட்சம்,  நகர நிர்வாகிகளிடம் 2 லட்சம் ரூபாய் என கட்சிக்காரங்களிடம் அடிமட்டம் வரை வசூலிக்க ஆரம்பித்து இருக்கிறார்.

  முன்பெல்லாம் கட்சிக் கூட்டம் என்றால் அறிவாலயம், அல்லது அன்பகத்தில் நடக்கும். ஆனால், கட்சிகாரர்களிடம் பணத்தை கறந்து நட்சத்திர ஹோட்டல்களில் கட்சிக்கூட்டங்களை நடத்தி பணத்தை தண்ணீராய் விட்டெரிகிறார்.  (ஊரான் பணம்தானே…)

  udhaya

  மக்களவை தேர்தல், இடைத்தேர்தல் என செலவு செய்து, ஓய்ந்திருக்கும் நிலையில் மீண்டும் சந்தா கேட்டு நச்சரிக்கிறார்களே என கட்சி நிர்வாகிகௌல்லாம், வருத்தப்பட்டு வருகிறார்கள். இதில் உள்ளாட்சி தேர்தல் வேற வருகிறது. என்ன செய்வது எனப் புலம்பித் தீர்க்கிறார்கள் கழக உடன்பிறப்புகள். அதுமட்டுமா உதயநிதியை இப்போது அவரது கட்சிக்காரர்கள் சிலர் வசூல்நிதி என்றே அழைக்கிறார்கள்.