உடைக்க முடியாததை கூட இப்படி உடைத்து விட்டீர்களே! கடுப்பான நடிகை சோனாக்‌ஷி சின்ஹா

  0
  3
   சோனாக்‌ஷி சின்ஹா

  ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா.

  தமிழில், லிங்கா படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்தவர் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா. இவர் சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்துள்ளார். அப்போது அவரின் சூட்கேசின் கைப்பிடிகள், கீழுள்ள சக்கரங்கள் அனைத்தும் உடைந்த நிலையில் இருந்துள்ளது .

  sona

  இதை தனது  டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், உடைக்க முடியாததை கூட இப்படி உடைத்து விட்டீர்களே! இண்டிகோ விமானத்தின் பயணத்தின் போது எனது சூட்கேசின் கைப்பிடிகள், சக்கரங்கள் உடைந்துள்ளன. இண்டிகோ விமான ஊழியர்களே நன்றி! என்று பதிவிட்டுள்ளார்.

  sona

  சோனாக்‌ஷி சின்ஹா இந்த  வீடியோ வைரலானதை அடுத்து, பலரும் தங்களுக்கும் இதுபோன்று நடந்துள்ளது என்று கூறி தங்கள் தரப்பு கருத்துக்களை பதிவிட தொடங்கினர்.

  இந்நிலையில்  இதுக்குறித்து இண்டிகோ  நிறுவனம் சோனாக்‌ஷி சின்ஹாவிடம் வருத்தம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து லக்கேஜை கையாளும் எங்கள் குழுவிடம் ஆலோசித்த பிறகு உங்களை தொடர்புகொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளது.