‘உடல் முழுவதும் ரத்த காயங்கள்’ : பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர்; பகீர் கிளப்பும் சம்பவம்!

  0
  2
  ராஜ்குமார்

  கடுமையான தண்டனைகள் மட்டுமே தீர்வாக அமையும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்

  பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது. இதற்குக் கடுமையான தண்டனைகள் மட்டுமே தீர்வாக அமையும் என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் இன்னும் இதற்கு ஒரு தீர்வு அமைந்தபாடில்லை. 

  harassment

  இந்நிலையில்  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கீழமுத்தனம்பட்டி என்ற கிராமம் உள்ளது. இங்கு ராஜ்குமார் என்ற 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர்  விவசாயம் பார்த்து வந்துள்ளார். 

  harassment

  இதையடுத்து ராஜ்குமார் நேற்று முன்தினம் நாச்சியார்புரம் சாலையில்  தோட்ட வேலைக்கு சென்றுகொண்டிருந்த பெண்  ஒருவரை வலுக்கட்டாயமாகக் காட்டுக்குள் தூக்கி சென்று, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மேலும் காமவெறியில் அந்த பெண்ணை உடல் முழுவதும் ரத்தம் வரும் அளவிற்கு கடித்து வைத்துள்ளார் ராஜ்குமார். 

  crime

  இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் போலீசில் கொடுத்த நிலையில் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,  ராஜ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.