உடல் எடையைக் குறைக்கும் கொள்ளு குழம்பு!

  0
  6
  கொள்ளு குழம்பு

  உடல் எடையைக் குறைக்க விரும்புவோரும் எப்போதும் உடல் குளிர்ச்சியாகவே இருப்பவர்களும் இதைச் சாப்பிடலாம். உடல் சூடு அதிகரிக்கும் என்பதால் பெண்கள் மாதவிலக்கு காலங்களில் சாப்பிடக்கூடாது. புதிதாக திருமணமான பெண்களும் சாப்பிடக்கூடாது.

  kollu kulambhu

  தேவையான பொருட்கள்
  கொள்ளு -100கி
  காயந்த மிளகாய் -4
  புளி – சிறு எலுமிச்சை அளவு
  சுக்கு – 1 இன்ச்
  பெருங்காயம் -சிறு துண்டு
  கடுகு -1/2டீஸ்பூன்
  உப்பு -தேவையான அளவு
  செய்முறை
  கொள்ளு, மிளகாய் வற்றல், சுக்கு, பெருங்காயம் அனைத்தையும் எண்ணெய் விடாமல்  வெறும் வாணலியில்  வறுத்து உப்புடன் பொடி செய்ய வேண்டும். புளிக்கரைசலை தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விட வேண்டும். கொதி வந்தவுடன் வறுத்த பொடியைப் போட்டு கொஞ்சம் கொதித்ததும் இறக்கி விட வேண்டும். கொள்ளு குழம்பு தயார்.