உடல் ஆரோக்கியத்திற்கு புத்தாண்டில் உறுதி மொழி எடுத்தவரா நீங்கள்?

  0
  6
  உறுதி மொழி

  உடல் ஆரோக்கியத்தை கடைப்பிடிக்க உறுதி மொழி எடுத்துக் கொண்டவர்காள இருந்தால் பின்வரும் தகவல்கள் உங்களுக்கு உதவக்கூடும்.

  new year

  ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்தின்போதும், இந்த ஆண்டில் ஏதாவது புதியதாக செய்ய வேண்டும் என்பதற்காக உறுதி மொழி எடுப்பவர்கள் பலர். ஜனவரி முழுவதும் கடைப்பிடிப்பர். பிப்ரவரியில் கொஞ்சம் தளவர்வர். அப்படியே படிப்படியாக ஏப்ரலுக்கு பின்னர், இதெல்லாம் நம்மளால முடியாது மனதை தேத்திக்கொண்டு பழைய நிலைக்கு மாறிவிடுவர். இது சாதாரண வாக்கிங் செல்வது முதல், குடிப்பழக்கத்தை நிறுவத்துவது வரை எல்லாவற்றிற்கும் பொருந்தும்.

  jog

  ஒருவர் உடல் பருமன் ஆவதற்கு உறவுகளின் ஜீன் மட்டும் காரணம் இல்லையாம், நண்பர்களாக இருந்தாலுமாம் என ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. மசாசுசெட்ஸ்-ல் உள்ள பிரமிங்ஹாம் நகரில் குடியிருக்கும் 3 தலைமுறையினரின் வாழ்க்கையை தொடர்ந்து கண்காணித்து ஒரு அறிக்கை தயாரித்துள்ளது.

  obesity

  தனது சமூக வட்டத்தில் ஒருவர் உடல் பருமனாகும் நிலை ஏற்பட்டால், ஆய்வுக்குரியவரும் உடல் பருமன் நிலைக்கு ஆளாகிறார் என ஆய்வு கூறுகிறது. நண்பராக இருந்தால் 57 சதவீதமும், உறவாக இருந்தால் 40 சதவீதமும், வாழ்க்கைத் துணையாக இருந்தால் 37 சதவீதமும் வாய்ப்பு உள்ளதாக கூறுகிறது. 
  ஒரு நபர் தினமும் பக்கத்து வீட்டு நபரை பார்ப்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பு இல்லை என்றால் உடல் எடையில் பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை என ஆய்வு கூறுகிறது.

  smoking

  பிரபலமானவர்களைப் பார்த்து டீன்ஏஜ் வயதினரிடம் புகைபிடிக்கும் பழக்கம் அதிகரிக்கிறது, அதைக் கைவிடுவோரின் எண்ணிக்கை குறைகிறது. நண்பர்கள் உற்சாகக் குறைவு அடைந்தால் இளம் வயதினரின் உற்சாகமும் குறைந்துவிடுகிறது. இவருக்கு உற்சாகம் குறைந்தால் அவருக்கும் குறைகிறது.

  teen

  இந்த அறிகுறிகள் மருத்துவ ரீதியிலான மன அழுத்தம் ஏற்படுத்துவதாக, பரவக் கூடியதாக இல்லை. ஆனால், டீன்ஏஜ் பருவத்தினரின் உற்சாகக் குறைபாடு அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தைப் பாதித்து, சில நேரங்களில் பிற்காலத்தில் மருத்துவ ரீதியில் மன அழுத்தம் ஏற்படுத்துவதாக அமைந்துவிடுவது உண்டு.

  teen

  ஆரோக்கியம் குறித்த வழக்கமாக அனுப்பும் தகவல்கள் ஆரோக்கியத்தில் சமத்துவமற்ற நிலையை அதிகரிக்கச் செய்கிறது. ஏனெனில், அந்த ஆலோசனைகளை எல்லோரும் எடுத்துக் கொள்ளும் நிலையில் இல்லை. பழக்க வழக்க மாற்றம் – ஆரோக்கியமான பழக்கங்களை அதிகரிக்கச் செய்வதற்கு அரசு மற்றும் தேசிய சுகாதாரத் துறைக்கு உதவக் கூடும், தொற்றும் தன்மை இல்லாத நோய்களால் எதிர்காலத்தில் துன்பங்கள் மற்றும் மரணங்களை எப்படி குறைக்க முடியும் என்பது குறித்து மேலும் ஆய்வு நடந்து வருகிறது.