உடலை  பலப்படுத்தும் கறிவேப்பிலை நெல்லிக்காய் சாதம்

  0
  6
   கறிவேப்பிலை நெல்லிக்காய் சாதம்

  பண்டிகைகள், விசேஷங்கள் என்று வரிசையாக இனிப்புக்களும், எண்ணெய் பலகாரங்களும் சாப்பிட்டு பலரும் கலோரிகள் அதிகமாகி வயிற்று உப்புசம், வாயு பிடிப்பு என்று அவஸ்தையுடன் இருக்கிற இந்த நேரத்தில் எளிமையாக நம் வீட்டிலேயே தயார் செய்யலாம். இந்த கறிவேப்பிலை நெல்லிக்காய் சாதத்தை செய்து சாப்பிட உடல் எஃகு போல் பலப்படும். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான , சுவையான சாதம்.

  food

  தேவையான பொருட்கள்
  சீரக சம்பா அரிசி        -200கி
  நெய்                    -3டேபிள் ஸ்பூன்
  பெரிய நெல்லிக்காய்    -5
  கறிவேப்பிலை            -1/2கப்
  காய்ந்த மிளகாய்        -5
  பெருங்காயம்            -1சிட்டிகை
  உப்பு                -தேவையான அளவு
  எண்ணெய்            -தேவையான அளவு
  முந்திரி                -10
  கடுகு                -1/2டீ ஸ்பூன்
  கடலைபருப்பு            -1/2டீ ஸ்பூன்
  உளுத்தம்பருப்பு        -1/2டீ ஸ்பூன்
  செய்முறை
  அரிசியை உதிரி உதிரியாக வடித்து தட்டில் ஆற வைக்க வேண்டும். நெல்லிக்காய்களை கழுவி துடைத்து கொட்டையை எடுத்து விட்டு காய வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் எண்ணெயை காய வைத்து முதலில் பெருங்காயத்தை பொரிய விட்டு எடுக்க வேண்டும். அதே எண்ணெயில் மிளகாயையையும் வறுத்து கறிவேப்பிலையையும் போட்டு லேசாக வறுக்க வேண்டும். காய்ந்திருக்கும் நெல்லிக்காயை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும். பின்பு மிளகாய், உப்பு,பெருங்காயம் போட்டு அரைத்து கடைசியில் கறிவேப்பிலை போட்டு பொடி செய்ய வேண்டும். ஆற வைத்த சாதத்தில் இந்த பொடியைப் போட்டு தாளிப்பையும் போட்டு கலந்து விட சத்தான சுவையான கறிவேப்பிலை நெல்லிக்காய் சாதம் ரெடி.