உடலில் டெஸ்டரை வைத்து மின்சாரம் கசிக்கிறதா என்று ஆய்வு செய்த மதிமுக எம்பி!

  0
  13
  கணேசமூர்த்தி

  உயர்மின் கோபுரத்தின் கீழ் மின்சாரம் பாய்கிறதா என்று உடலில் டெஸ்டர் வைத்து கணேசமூர்த்தி எம்.பி. ஆய்வு செய்தார்.

  பெருந்துறை:  உயர்மின் கோபுரத்தின் கீழ் மின்சாரம் பாய்கிறதா என்று உடலில் டெஸ்டர் வைத்து கணேசமூர்த்தி எம்.பி. ஆய்வு செய்தார்.

  ganesaa

  மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த மதிமுக, ஈரோடு தொகுதியில் களம் கண்டது. மதிமுக சார்பாக கணேச மூர்த்தி தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி.யாகியுள்ளார். இந்நிலையில் ஈரோடு தொகுதி எம்.பி கணேசமூர்த்திக்கு உயர்மின் கோபுரங்களால் விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற இடத்தில் கோபுரத்தின் கீழ் மின்சாரம் பாய்வதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு வந்த அவர், கோபுரத்தின் கீழ் பகுதியில் மின்சாரம் பாய்கிறதா? என்பதை கண்டறிய தன்னுடைய உடலில் டெஸ்டரை வைத்து பார்த்துள்ளார்.  அப்போது  டெஸ்டரில் விளக்கு எரிந்து மின்சாரம் பாய்வதை உறுதிப்படுத்தியது. இதை அவர் புகைப்படம் எடுத்து கொண்டார்.

  ganesa

  இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கணேசமூர்த்தி, ‘இந்த விவகாரத்தை  அறிக்கையாகத் தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை நாடாளுமன்றத்தில் காட்டி பேசுவதோடு,  மத்திய சுற்றுச்சூழல் துறை மற்றும் மின்சாரத்துறையின் கவனத்திற்கு இதைக் கொண்டு செல்வேன்’ என்றார்.

  இது போன்ற மின்கசிவால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற நோக்கத்திலேயே விளைநிலங்களில் உயர்மின் கோபுரங்கள் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இருப்பினும் அவர்களின் எதிர்ப்பை  மீறி இது போன்ற செயல்களில் அரசு ஈடுபட்டு மக்களின் நலனைக் கேள்விக்குறியாக்கி  விடுகிறது.