உச்சநீதிமன்றம் தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!  அயோத்தி வழக்கில் அதிரடி!

  0
  2
   அயோத்தி வழக்கில்

  பல வருடங்களாக நடைப்பெற்று வந்த அயோத்தியின் சர்ச்சைக்குரிய நில வழக்கில், இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பின் முக்கிய அம்சங்களைப் பார்க்கலாம்.
  அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு இன்று வழங்கிய தீர்ப்பில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மேலும், பாபர் மசூதி இருந்த இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியத்திற்கு 5 ஏக்கர் மாற்று இடத்தை வழங்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

  ayodhya

  அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்திற்குள் மத்திய அரசு அறக்கட்டளை ஒன்றை உருவாக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய அரசு உருவாக்கும் இந்த அறக்கட்டளை அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. 
  சர்ச்சைக்குரிய இடத்திற்கு உரிமை கோரிய சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோஹி அகாராவின் உட்பட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். கோவில் தரப்பிற்கு நிலத்தின் உரிமை வழங்கப்பட்டது. மசூதி தரப்பிற்கு மாற்று இடம் வழங்க உத்தரவிடப்பட்டது.