உச்சநீதிமன்றத்தை விளாசிய சமூக ஆர்வலர்! குவியும் கண்டனங்கள்!

  0
  2
  உச்சநீதிமன்றம்

  அயோத்தி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, பாரத பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  அயோத்தியா விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியோ, தோல்வியோ கிடையாது. அது ராம் பக்தியா இருந்தாலும் சரி, ரஹீம் பக்தியாக இருந்தாலும் சரி நாம் அனைவரும் ராஷ்ட்ரிய பக்தியால் ஒன்றுபடுவோம். எல்லோரும் அமைதி காப்போம் என்று பதிவிட்டுள்ளார்.

  ayodhya

  முன்னதாக, சமூக வலைத்தளங்களை காவல் துறை கண்காணிப்பதாகவும், தீர்ப்பு குறித்து தேவையற்ற கருத்துக்களை பகிர வேண்டாம் என்றும் காவல் துறையினர் எச்சரித்திருந்தனர். இந்நிலையில், சமூக ஆர்வலர் நந்தினி சுந்தர், அவருடைய ட்விட்டர் பதிவில், உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவு செய்துள்ளார்.

  post

  உச்சநீதிமன்றம் அரசுக்கு முழுவதுமாக கீழ்படியும் நிலைக்குச் சென்று விட்டதாகவும், அவர்களது புதிய ராம் ராஜ்ஜியத்தில் உண்மையும், நீதியும் இல்லாதது வெட்க கேடானது என்றும் பதிவு செய்துள்ளார்.
  பலரும் இந்த பதிவுக்கு எதிர்வினையாற்றி வருகிறார்கள். பெங்களூர் சிறையில், தண்டனை அனுபவித்து வரும் சசிகலா விதிமுறைகளை மீறியதை பகீரங்கமாக வெளியில் கொண்டு வந்த அதிகாரி ரூபா ஐபிஎஸ் இதைப் பகிர்ந்து, இது நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு என்று கூறியிருக்கிறார். இந்த பதிவை பலரும் காவல்துறைக்கு டேக் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறார்கள்.