உச்சகட்ட கோபத்தில் இருந்த ஷெரின்: ஒரே வார்த்தையில் வெட்கப்பட வைத்த தர்ஷன்

  0
  1
   ஷெரின்

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது.

  பிக்பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் இந்த வாரம் டிக்கெட் டூ பினாலே  டாஸ்க் நடந்து வருகிறது.  முதல் கட்டமாக நடந்த நான்கு டாஸ்க்குகளில் தனி நபராக தர்ஷனும், இரண்டாவது டாஸ்கில் குழுவாக தர்ஷன், ஷெரின், கவின் ஆகிய மூவரும் வென்றனர். மூன்றாவது டாஸ்க்கில் ஷெரினும், நான்காவது டாஸ்க்கில் முகினும் வெற்றி பெற்றார்கள். மேலும் நேற்று நடந்த  டாஸ்கில் முகின் மற்றும் சேரன் வெற்றி பெற்றனர்.  

  sherin

  இன்றைய நாளுக்கான புதிய டாஸ்க்கில்  லாஸ்லியாவை சாண்டி கீழே தள்ளிவிட, உடனே கோப்பட்ட  கவின்  சாண்டியிடம் மோதினார். அடுத்து விளையாடிக் கொண்டிருக்கும் போதே,   லாஸ்லியாவிடம் சென்று, அடிப்பட்டுருக்கா? விளையாடுறியா இதுக்கு அப்புறம் என்று கேட்டுக்கொண்டிருக்க, கடுப்பான  ஷெரின் ஆட விருப்பம் இல்லனா எதுக்கு விளையாட வரீங்க என்று கோபப்பட்டு ஆட்டத்தை தொடராமல் சென்றுவிட்டார். 

   

  இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தர்ஷன் ஷெரினிடம், சரிவிடு அது சின்ன பிரச்னை. அதையே ஏன்  நினைச்சிட்டு இருக்க என்று கேட்க, அதற்கு ஷெரின், இங்க கேம் ஆட வந்துருக்காங்க, இல்ல என்ன வந்துருக்காங்கன்னு எனக்கு புரியல. எதுக்காக கேம் நிறுத்தணும். எல்லாரும் அடிவாங்கிட்டு தான் விளையாடுறாங்க.இது நல்லா இல்ல என்று கோபப்பட, தர்ஷன் உடனே இவ்வளவு அழகான பொண்ணு கோபப்படலாமா ‘ என்று சொல்லி ஷெரினை கூலாக்குகிறார்.