உங்க குழந்தைங்க ஆன்லைன்ல தோனியைத் தேடுறாங்களா…? இனி ரொம்ப உஷாரா இருங்க!

  17
  தோனி

  இணைய வசதி இரண்டு பக்கங்களிலும் பிடியில்லாத கத்தியைப் போன்று இருக்கிறது. அதிலும் அந்த பிடியில்லாத கத்தி யார் கையில் சிக்குகிறதோ அதைப் பொருத்து பலன்களும், பாவங்களும் நிகழ்கின்றன

  இணைய வசதி இரண்டு பக்கங்களிலும் பிடியில்லாத கத்தியைப் போன்று இருக்கிறது. அதிலும் அந்த பிடியில்லாத கத்தி யார் கையில் சிக்குகிறதோ அதைப் பொருத்து பலன்களும், பாவங்களும் நிகழ்கின்றன. நிறைய தகவல் களஞ்சியங்கள் இணையத்தில் கொட்டிக் கிடந்தாலும், சிலர் ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் கொட்டி வைத்திருக்கிறார்கள். நாமாக இந்த தளங்களுக்குச் சென்று பார்க்கா விட்டாலும், இணையதளத்தில் அதிகமானோர் தேடுதல் வேட்டை நிகழ்த்தும் செய்திகளின் பின்னால் இந்த ஆபாச புகைப்படங்களையும், வீடியோக்களையும் ஒளித்து வைக்கிறார்கள் விஷமிகள்!

  dhoni

  அப்படி ஆன்லைனில் அதிகமாக தேடப்படுவது கிரிக்கெட் வீரர் தோனி. தோனியைப் பற்றிய செய்திகளை அறிந்துக் கொள்வதற்கு நிறைய பேர் ஆர்வமாக உள்ளனர். இப்படி ஒவ்வொருவரைப் பற்றியும் தேடும் போது ஆபத்தை ஏற்படுத்தும் லிங்க்குகள் பிரபலங்களின் பெயர்களைப் பயன்படுத்தி ஆபாசத் தளங்களைக் காட்சிக்கு விரிக்கின்றன. இதைப் போல ஆபத்தை ஏற்படுத்தும் பிரபலங்களின் பட்டியலில் தோனியின் பெயர் முதலிடத்திலும், 2வது இடத்தில் சச்சின் டெண்டுல்கர்  பெயரும் உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  porn

  இவர்களோடு நடிகை சன்னி லியோன், பி.வி.சிந்து, ஷ்ரத்தா கபூர், ராதிகா ஆப்தே ஆகியோர் பெயர்களும் 10 இடங்களுக்குள் இருக்கின்றன. இனி உங்க குழந்தைகள் ஆன்லைனில் தோனியைப் பற்றிய செய்தியைத் தான் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என கவனக்குறைவாக இருக்காமல், அந்த தளங்களில் ஏதேனும் ஆபாச தளங்களுக்கான லிங்க்குகள் இருக்கின்றனவா என்பதையும் சோதித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்!