உங்கள் முகம் பொலிவுடன் இருக்க வேண்டுமா…அசத்தலான 5 ஐடியா!

  0
  7
  beauty tips

  கோடை காலத்தில் பொதுவாகவே நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். அதை சரிசெய்வதற்காக அடிக்கடி பார்லருக்கு போக முடியாது. அப்படி போக நேரம் இருந்தாலும் கூடுதல் செலவு பிடிக்கும். இழந்த பொலிவை மீண்டும் பெற சிம்பிளாக நம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரி பண்ண சில ஃபேஸ் பேக் அயிட்டங்களை செய்து பயன் படுத்தலாம்

  கோடை காலத்தில் பொதுவாகவே நமது சருமம் பொலிவிழந்து காணப்படும். அதை சரிசெய்வதற்காக அடிக்கடி பார்லருக்கு போக முடியாது. அப்படி போக நேரம் இருந்தாலும் கூடுதல் செலவு பிடிக்கும். இழந்த பொலிவை மீண்டும் பெற சிம்பிளாக நம் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே சரி பண்ண சில ஃபேஸ் பேக் அயிட்டங்களை செய்து பயன் படுத்தலாம். பின்வரும் ஏதேனும் ஒரு ஃபேஸ் பேக்கை ட்ரை பண்ணிப்பாருங்கள்.
   

  beauty tips
   
  டிப்ஸ்  1 : கடலை மாவு மற்றும் தயிர் 
   
  ஒரு பாத்திரத்தில் கடலை மாவு மற்றும் தயிரை எடுத்து பேஸ்ட் பதத்திற்கு  நன்றாக கலக்கி முகத்தில் பூசி கொள்ளவும் .15 நிமிடம் முகத்தில் உலரவிட்டு பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவேண்டும். 
   
  டிப்ஸ்  2 : தேன் மற்றும் எலும்பிச்சை 
   
  எலும்பிச்சையை பாதியாக  வெட்டி அதில் சிறிதளவு தேனை ஊற்றி முகத்தில் தடவி கொள்ளவும் .5 நிமிடம் கழித்து முகத்தை கழுவி விடவும்.
   
  டிப்ஸ்  3 : தேன் மற்றும் பால் 
   
  ஒரு பாத்திரத்தில் 2 tsp தேன் மற்றும் 2 tsp பாலை எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் பூசி கொள்ளவும் .30 நிமிடத்திற்கு  பிறகு முகத்தை குளிர்ந்த நீரை வைத்து கழுவ வேண்டும். 
   
  டிப்ஸ்  4 : எலும்பிச்சை சாறு மற்றும் உருளைக்கிழங்கு சாறு 
   
  ஒரு பாத்திரத்தில் 2 tsp எலும்பிச்சை சாறையும் , 2 tsp உருளைக்கிழங்கு சாறை எடுத்து நன்றாக கலக்கி முகத்தில் தடவி கொள்ளவும் .30 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும் .
   
  டிப்ஸ்  5 : பப்பாளி மற்றும் தேன்

  ஒரு துண்டு பப்பாளியை மசித்து அதனுடன் 1 tsp தேனை சேர்த்து முகத்தில் பூசி கொள்ளவும் .30 நிமிடம் உலரவிட்டு பின் முகத்தை சாதாரண நீரை வைத்து  கழுவ வேண்டும்.
   
  இப்போது கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பாருங்கள் பொலிவோடு இருக்கா…!இவையிலிருந்து ஏதாவது ஒன்றை வாரத்தில் 2 முறை உபயோகித்தால் போதும். அப்பறமென்ன;கலக்குங்க!