உங்களோடு சேர்த்து உங்க குடும்பத்தையும் சாகடிக்கப் போறீங்களா? – தெருவில் சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீஸ் அட்வைஸ்

  0
  1
  police requests

  திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் செய்த அட்வைஸ் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

  திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் ஊரடங்கு நேரத்தில் வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் செய்த அட்வைஸ் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
  கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று உள்ள இடம், தொற்று இல்லாத இடம் என்று எதுவும் பிரித்துப் பார்க்க நேரமில்லை என்பதால் நாடு முழுவதுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், நம் ஊரில் கொரோனா பாதிப்பு இல்லை என்று கூறி சிறு நகரங்களில் உள்ள மக்கள் சர்வ சாதாரணமாக வெளி இடங்களில் நடக்கும் நிகழ்வுகள் அதிகமாக உள்ளது.

  tn-police-89

  திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூரில் அப்படி வெளியில் நடமாடியவர்களுக்கு போலீஸ் அதிகாரி செய்த அட்வைஸ் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:
  “பெரிய ஆளு, சின்ன ஆளு, படிச்சவன், படிக்காதவன் எல்லோரும் சுற்றிக் கொண்டிருக்கின்றீர்கள். இப்படி இருந்தால் எப்படி கொரோனாவை கட்டுப்படுத்துவீர்கள்? எங்களால் முடிந்தது இன்னும் ஆயிரம் பேருக்கு கொரோனாவை பரப்புகிறோம் என்று சுற்றுவது போல உள்ளது. உங்க மேல் கேஸ் போட்டு ஜெயலில் கூட அடைக்க முடியாது. அங்கேயும் கொரோனா வந்துவிடும் என்று பயப்படுகிறார்கள். ஏன் உங்களுக்கு புரியமாட்டேங்குது? வீட்டில் இருக்க முடியவில்லையா? 
  நான்கு தெரு உள்ள வேச்சத்தூரில் 100 வண்டிகளை வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கின்றீர்கள். அசிங்கமாக இருக்கிறது. நீங்கள் எல்லாம் இந்திய பிரஜைதானே… தமிழ்நாட்டில்தானே இருக்கின்றீர்கள். கொஞ்சமாவது பொறுப்புணர்வு உள்ளதா? 

  police-requests-78

  இப்படியே அலைந்தால் தெருவில் எவன் எவனையோ பார்க்கலாம். எவனாவது ஒட்டிவிட்டால், வீட்டுக்குப்போய், பொண்டாட்டி புள்ளைங்க, குழந்தை குட்டிங்க எல்லாத்துக்கும் பரப்பிவிட்டுவிடுங்க. உங்களால் முடிஞ்சது அதுதானே. அதுக்குத்தான் இருக்கின்றீர்களா எல்லோரும்? 
  கடந்த 15-20 நாளாக இந்த பிரச்னை ரொம்ப சீரியஸாக ஓடிக்கொண்டிருக்கிறது… எத்தனையோ முறை சொல்லிவிட்டார்கள். இன்னைக்கு ஒரு ஸ்டேஜில் இருக்கிறோம், ஒரு வாரம், பத்தே நாளில் எங்கே போய் நிற்கப்போகின்றீர்கள் பாருங்கள். பயமுறுத்துவதற்காகச் சொல்லவில்லை. இதுதான் எதார்த்தம், இதுதான் உண்மை. தேசிய பேரிடராக அறிவித்திருக்கிறார்கள். இதை இப்படி சாதாரணமாக ஹேண்டில் செய்துகொண்டிருக்கீங்க. இதற்கெல்லாம் பெரிய படிப்பு படித்திருக்கனும் என்று அவசியம் இல்லை. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். போதுமான விழிப்புணர்வு எல்லோருக்கும் கொடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.