உங்களை எல்லாம் இன்னும் எத்தனை பெரியார் வந்தாலும் திருத்த முடியாதுடா டேய்!

  0
  1
  Religious atrocities

  இந்தியா என் தாய்நாடு, இந்தியர் அனைவரும் என் சகோதரர்கள் என வாய்வார்த்தைக்காக இதுநாள்வரை சொல்லிவந்தனர். இனிமேலு அதற்கும் தடைபோட்டுவிடுவார்கள் போல. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தியர்கள், அவர்கள் மட்டுமே என் சகோதரர்கள் என உறுதிமொழியையே மாற்றும் நிலை விரைவில் ஏற்படும் போலிருக்கிறது.

  இந்தியா என் தாய்நாடு, இந்தியர் அனைவரும் என் சகோதரர்கள் என வாய்வார்த்தைக்காக இதுநாள்வரை சொல்லிவந்தனர். இனிமேலு அதற்கும் தடைபோட்டுவிடுவார்கள் போல. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இந்தியர்கள், அவர்கள் மட்டுமே என் சகோதரர்கள் என உறுதிமொழியையே மாற்றும் நிலை விரைவில் ஏற்படும் போலிருக்கிறது. சம்பவம் ஏதோ பீஹாரிலோ, உத்தரபிரதேசத்திலோ நிகழவில்லை. நம்ம காவிரி டெல்ட்டாவில்
  இந்த அவலம் நிகழ்ந்திருக்கிறது.

  Vasanthi

  நாகை மாவட்டம் கோதண்டராஜபுரத்தை சேர்ந்த தென்கோவன், வசந்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தென்கோவனின் குடும்பத்தினர் மதம் மாறியதாக கூறப்படுகிறது. நேற்று கோவன் வெளியூர் சென்றிருந்த நிலையில், வசந்தியின் வீட்டுக்கு சென்ற சிலர், ஊரை காலி செய்யுமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மகன்களுடன் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த வசந்தி உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட போலீசார் 3 பேரையும் தடுத்து நிறுத்தி, விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.