‘உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை மீரா. தயவு செய்து மருத்துவரைப் பாருங்கள்’ : மீரா மிதுனை வெளுக்கும் பிரபல இயக்குநர்!

  0
  1
  மீரா மிதுன்

  இயக்குநர் நவீனுக்கும் பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுனுக்கும் டிவிட்டரில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. 

  இயக்குநர் நவீனுக்கும் பிக் பாஸ் போட்டியாளர் மீரா மிதுனுக்கும் டிவிட்டரில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. 

  ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து நடித்து வரும் திரைப்படம் அக்னி சிறகுகள். இப்படத்தில் அக்ஷரா ஹாசன், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சென்றாயன், பிக் பாஸ் 3 புகழ் மீரா மிதுன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.அம்மா கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு நடராஜன் சங்கரன் இசையமைக்கிறார்.  கே.ஏ.பாட்சா ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் ஐரோப்பாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

  meera

  இந்நிலையில் சர்ச்சைக்கு பெயர்போன மீரா மிதுன், ‘அக்னிசிறகுகள் படத்திலிருந்து  தன்னை நீக்கி விட்டார்கள் என்று கூறி குற்றச்சாட்டை கிளப்பினார். இதற்கு பதிலளித்துள்ள நவீன், அக்னிச் சிறகுகள் படத்தில் ஷாலினி பாண்டேவுக்கு பதிலாகத்தான் அக்ஷரா ஹாசன் நடிக்கிறார். மீரா மிதுன் ஒப்பந்தம் செய்யப்படவில்லை. எனக்குத் தெரியாமலேயே பத்திரிகைகளில் தான் படத்தில் இருப்பதாகச் சொல்லி வருகிறார். முதலில் இதை ஒரு விவகாரமாக்க நான் விரும்பவில்லை’ என்று பதிவிட்டார்.

  இதற்கு பதிலளித்த மீரா மிதுன், ஏஞ்சலினா ஜோலி போல நடிப்பதற்கு சில காட்சிகளை என்னிடம் காட்டி பேசினீர்கள். உங்களுக்கு அது மறந்துவிட்டால், நான் சொல்லட்டுமா இயக்குநர் நவீன் சார் என்றும் ஒரு ஆணாக பேசுங்கள். இல்லையென்றால் மனநல மருத்துவரை அணுகுங்கள் என்று வறுத்தெடுத்தார். 
  இதை தொடர்ந்து இயக்குநர்  நவீனோ, உங்களுக்கு ஏதோ பெரிய பிரச்னை மீரா. தயவு செய்து மருத்துவரைப் பாருங்கள். இது தான் உங்களுடைய முட்டாள்தனமான ட்வீட்களுக்கு, நான் அளிக்கும் கடைசி பதில்’ என்று கூறினார். 

  meera

  இதற்கு மீண்டும் பதிலளித்த மீரா மிதுன், ஒரு பெண்ணை எப்படி மருத்துவரை பார்க்க சொல்லலாம். நம் இருவருக்கும் நடந்த உரையாடல்களை வெளியிட்டால் உங்கள் குடும்பத்தில் உள்ள பெண்களுக்கும் பிரச்னை தான். என்ன வெளியிடவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

  meera

  ஏற்கனவே நம்ம வீடு பிள்ளை படத்திலிருந்து தான் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டதாக கூறிவந்த மீரா மிதுன் தற்போது அக்னி  சிறகுகள் பக்கம் திரும்பியுள்ளார்.