ஈஸ்டர்ன் மசாலா கம்பெனியில் பயங்கர தீ விபத்து…!

  0
  12
  Eastern masala company

  தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் ஈஸ்டர்ன் மசாலா பல்வேறு வகையான உணவு வகைக்கான மசாலா பொருட்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன.

  தேனி மாவட்டத்தில் இயங்கி வரும் ஈஸ்டர்ன் மசாலா பல்வேறு வகையான உணவு வகைக்கான மசாலா பொருட்கள் தயாரிக்கப் பட்டு வருகின்றன. நிறைய பணியாளர்கள் வேலை செய்யும் இந்த மசாலா ஆலையில் காலை 9 மணி அளவில் சேமிப்புக் கிடங்கில் தீ பற்றியுள்ளது. அதனையடுத்து, மளமளவெனப் பரவிய தீ சேமிப்புக் கிடங்கு முழுவதுமாக கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. 

  Eastern masala

  உடனே, தீயணைப்புத் துறைக்குத் தகவல் ஊழியர்கள் தகவல் அளித்துள்ளனர். பல்வேறு பகுதியைச் சேர்ந்த 5 தீயணைப்பு வாகனங்கள் அங்கே வந்து தீயைக் கட்டுப்படுத்த முயற்சி செய்துள்ளனர். ஆனால், தீ பயங்கரமாக எரிந்து கொண்டிருந்ததால் தீயணைப்புத் துறையினரால் தீயைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் திணறி வருகின்றனர். 

  மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியர் பல்லவ தேவ் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார் எனத் தகவல்கள் வெளியாகின்றன.