ஈரானில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பலி எண்ணிக்கை 12-ஆக அதிகரிப்பு

  0
  2
  coronavirus

  ஈரானில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

  தெஹ்ரான்: ஈரானில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.

  சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. இந்த வைரஸ் காய்ச்சலை கட்டுப்படுத்த முடியாததால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே செல்கிறது. ஆனால் கொரோனா வைரஸ் தாக்குதல் சிறிதளவு குறைய தொடங்கியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது.

  ttn

  இந்த நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றான ஈரானில் உள்ள குவாம் நகரில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதனை அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், ஈரானில் 61 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.