இஸ்லாமிய பெண்கள் வீட்டில் இருந்து தொழுதால் போதும்; உச்சநீதிமன்ற மனுவுக்கு இஸ்லாமிய அமைப்பு கருத்து

  0
  7
  தொழுகை

  புனேவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதியர், இஸ்லாமிய பெண்கள் மசூதிக்குள் சென்று தொழுகை நடத்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்ததை தொடர்ந்து, இஸ்லாமிய பெண்கள் வீட்டில் இருந்தே தொழுதால் போதும் என கேரளாவை சேர்ந்த இஸ்லாமிய அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

  ffffv

  மத்திய – மாநில அரசுகளின் நிதியுதவி மற்றும் பிற சலுகைகளுடன் இயங்கிவரும் மசூதிக்குள் பாலின பாகுபாட்டை காரணம்காட்டி பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவது அரசியலமைப்பு சட்டம் அளித்துள்ள சமத்துவத்துக்கு எதிரானது என இஸ்லாமிய தம்பதியர் தங்கள் மனுவில் குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வேறு எந்த நாட்டிலாவது பெண்களுக்கு மசூதிக்குள் தொழுகை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா என விசாரித்தார். 

  இஸ்லாத்

  இதற்கு மனுதாரரின் வழக்கறிஞர், மெக்கா மற்றும் கன்னடாவில் உள்ள சில மசூதிகளில் அனுமதி அளிக்கப்படுவதை சுட்டிக்காட்டினார். இந்த விவகாரத்தில் தீர்ப்பு அளிக்கும் முன்பு, இதுகுறித்து மத்திய அரசாங்கத்திடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். சபரிமலை விவகாரம் போல இது பிரச்னையில் முடிந்துவிடக் கூடாது என்பதை சுட்டிக்காட்டினர்.

  இஸ்லாத்

  இந்த வழக்கு குறித்து அறிந்த சமஸ்த கேரளா ஜமாத உலாமா எனும் கேரளாவை சேர்ந்த சன்னி இஸ்லாமிய அமைப்பு, இஸ்லாமிய பெண்கள் வீட்டில் இருந்தே தொழுதால் போதும் என கருத்து தெரிவித்துள்ளது.

  இதுகுறித்து அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் அலிக்குட்டி முஸலியார், மதம் சார்ந்த விஷயங்களில் நீதிமன்றம் தலையிடுவதை நாங்கள் விரும்பமாட்டோம். சபரிமலை விஷயத்திலும் கூட நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் ஆதரிக்கவில்லை. மசூதிக்குள் பெண்கள் அனுமதி என்பது 1,400 ஆண்டுகால பழையான விஷயம், ஆண்கள் மட்டுமே மசூதிகளில் தொழுகை நடத்தவேண்டும் என நபிகள் சொல்லியிருக்கிறார் என தெரிவித்துள்ளார்.

  இதையும் படிங்க: நோட்டாவுக்கு ஒட்டு போடாதீங்க…வெங்கட் பிரபு வேண்டுகோள்…