இஸ்லாமியரை காதலித்து திருமணம் செய்த  காமெடி நடிகரின் மகள்..!

  0
  5
  ஸ்ரீலட்சுமி

  மலையாள சினிமாவின் நல்ல இனையற்ற நகைச்சுவை நடிகராக இருந்தவர் ஜெகதி ஸ்ரீகுமார்.பிரேம் நசீர் காலம்துவங்கி சில ஆண்டுகள் முன்புவரை அவர் இல்லாத மலையாள சினிமாவையே பார்க்க முடியாது என்கிற நிலையில் இருந்த அவர்,நம்ம மனோரமா ஆச்சி மாதிரி 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்தவர் .

  கடந்த 2012 ஜனவரியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் படுகாயமடைந்த ஜெகதி ஸ்ரீகுமார் கடந்த ஏழு ஆண்டுக்ல்ளாக திரைப்படம் எதிலும் நடிக்கவில்லை.அவரது மகளான ஸ்ரீலட்சுமி ஒரு இஸ்லாமியரை மணந்தார்.

  jagathi

  கடந்த 2012 ஜனவரியில் நிகழ்ந்த சாலை விபத்தொன்றில் படுகாயமடைந்த ஜெகதி ஸ்ரீகுமார் கடந்த ஏழு ஆண்டுக்ல்ளாக திரைப்படம் எதிலும் நடிக்கவில்லை.அவரது மகளான ஸ்ரீலட்சுமி ஒரு இஸ்லாமியரை மணந்தார்.
  அவரது திருமணச்செய்தியும் புகைப்படங்களும் மலையாள வலையுலகில் பரவி வருகின்றன.

  malayala actor

  துபாயில் வசிக்கும் கமர்சியல் ஏர்லைன்ஸ் விமானியான ஜிஜின் ஜஹாங்கீர் என்பவரை ஸ்ரீலட்சுமி மணந்தார்.ஐந்தாண்டுகால காதலுக்கும் ,காத்திருப்புக்கும் பிறகு கடந்த 17-ம் தேதி ஜிஜின்,ஸ்ரீலட்சுமி திருமணம் நடைபெற்றது. கொச்சி கிராண்ட் ஹயாத் நடந்த இந்தத் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும்.நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாத்தினர்.

  இந்தத் திருமணம் இஸ்லாமிய முறைப்படி நடந்தது.இதில் மணமகள் ஸ்ரீலட்சுமி வட இந்திய மணமகள் போல கற்கள் பதித்த நெற்றிச் சுட்டியுடன் மருதாணி அணிந்து பட்டுப் புடவையில் ஸ்ரீலட்சுமியும்,மெரூன் நிற சூட்டில் ஜிஜினும் திருமணம் செய்து கொண்டனர்.

  marriage

  அதைத்தொடர்ந்து ஜிஜினின் கையை பிடித்தபடி நிற்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் ஸ்ரீலட்சுமி.அது சோஷியல் மீடியாக்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.இப்போது ஓமன் நகரில் ஒரு பிரபல நிறுவனத்தின் மார்க்கெட்டிங் பிரிவில் பணியாற்றி வருகிறார் ஸ்ரீலட்சுமி.