‘இஷ்டத்துக்கு உளறாதீங்க பாஸ்’…அஜீத் பற்றிய பகீர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த யுவன்…

  0
  1
  யுவன்

  எழுதுவதற்கு கைவசம் செய்திகள் இல்லாதபோது என்னத்தையாவது எழுதி அதற்கு மறுப்பு வரும்போது இன்னும் உற்சாகமாக அதையும் செய்தியாகப் போடுவதுதான் இணையதளங்களின்  இப்போதைய தர்மம் அதர்மம் எல்லாம்.

  எழுதுவதற்கு கைவசம் செய்திகள் இல்லாதபோது என்னத்தையாவது எழுதி அதற்கு மறுப்பு வரும்போது இன்னும் உற்சாகமாக அதையும் செய்தியாகப் போடுவதுதான் இணையதளங்களின்  இப்போதைய தர்மம் அதர்மம் எல்லாம்.

  ajith

  அந்த வகையில் அஜீத் பற்றி லேட்டஸ்டாகக் கிளப்பப்பட்ட செய்தி, அவர் தனது ’நேர்கொண்ட பார்வை’யில் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் அல்லது பாடவிருக்கிறார் என்பது. இந்த செய்திக்கு சின்னதாக ஒரு லாஜிக்கும் இருக்கிறது. இப்படத்தின் ஒரிஜினலான பிங்கில் அஜீத் வேடத்தில் நடித்த அமிதாப் ஒரு பாடலை உறுமித் தள்ளியிருக்கிறார். ஸோ அதே அமிதாப் வேடத்தில் நடிக்கும் அஜீத், அதே அமிதாப்பின் பாடலைப் பாடினால் என்ன தப்பு என்று போட்டுவாங்கப் போட்ட செய்தியே அது.

  yuvan

  அஜீத் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அச்செய்தி தித்திப்பாக இருக்கலாம். ஆனால் தமிழ் உச்சரிப்பில் இத்தனை படங்கள் நடித்தபிறகும் தடுமாறுகிறார் என்கிற நடுநிலைவாதிகள் அவர் பாடப்போகிறார் என்றால் நடுநடுங்கிவிடமாட்டார்களா? அப்படிப் பலர் அச்செய்தியால் தூக்கம் இழந்து துக்க மோடில் இருந்த நிலையில், அவர்களது கண்ணீரைத் துடைக்கும் வகையில் அதெல்லாம் அநாவசியமான ரூமர் பாஸ். அந்த மாதிரி எந்த ஐடியாவும் எங்களுக்கு இல்லை. பாடிப் படுத்துற அளவுக்கு தல அவ்வளவு மோசமான ஆளும் இல்ல’ என்று வயிற்றில் பால் வார்த்திருக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா