’இவர் போன்றவர்களால்தான் இன்னும் உலகம் இயங்குகிறது’…800 இஸ்லாமியர்களுக்காக மசூதி கட்டித்தந்த கிறிஸ்தவர்…

  0
  11
  ஷாஜி செரியன்

  ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஃபுஜைரா என்கிற நகரில் தனக்குச் சொந்தமான குடியிருப்பில் வசிக்கும் முஸ்லீம்களுக்காக ஒரு மசூதியே கட்டிக்கொடுத்திருக்கிறார் ஒரு இந்திய கிறிஸ்தவர்.

  ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள ஃபுஜைரா என்கிற நகரில் தனக்குச் சொந்தமான குடியிருப்பில் வசிக்கும் முஸ்லீம்களுக்காக ஒரு மசூதியே கட்டிக்கொடுத்திருக்கிறார் ஒரு இந்திய கிறிஸ்தவர்.

  கேரள மாநிலம் காயங்குளத்தைச் சேர்ந்த ஷாஜி செரியன் என்பவர்தான் அந்த அதிசய மனிதர்.யு.ஏ.ஈ நாட்டில் வந்து பணியாற்றும் தொழிலாளர்கள் தங்குவதற்காக ஷாஜிக்கு சொந்தமான குடியிருப்புகளை 53 கம்பெனிகள் வாடகைக்கு எடுத்திருக்கின்றன.

  mosque

  அந்தத் தொழிலாளர்களில் பெரும்பகுதி,சுமார் 800 பேர் இஸ்லாமியர்கள். பாகிஸ்தான்,வங்காளதேசம்,பிலிப்பைன்ஸ்,இந்தோனேசியா என்று பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.ரம்சான் மாதத்தில் தொழிலாளர்கள் வாடகைகார் பிடித்து மசூதியைத் தேடிப்போவதை பார்த்த ஷாஜி செரியன் அர்களின் தொழுகைக்காக ‘ மரியம் உம்மா ஈசா’ மசூதியை ( ஏசுவின் தாய் மரியா) கட்டிக்கொடுத்திருக்கிறார். 

  அதோடு பக்கத்தில் இருக்கும் தனக்கு சொந்தமான ஏ.சி ஹாலில் தினந்தோறும் 800 பேருக்கு இஃப்தார் விருந்தளிக்கிறார்.அதுவும் எப்படி,தினமும் ஒரே மெனு என்றால் சாப்பிடுபவருக்கு சலித்துவிடும் என்பதால்,தினமும் வெவ்வேறு வகை பிரியாணிகளோடு பழங்களும்,பழச்சாறுகளும்,இனிப்புகளும் வழங்குகிறார்.

  ஷாஜி செரியன்

  2003-ல் கையில் சில திர்ஹாம்களோடு வந்திறங்கிய ஷாஜி செரியன் இன்று 53 கம்பெனிகளுக்கு குடியிருப்புகள் கட்டி வாடகைக்கு விடுமளவுக்கு உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு இந்த கொடையுள்ளம்மும் ஒரு காரணம். 

  இதைத்தான் பாகிஸ்தானைச் சேர்ந்த 63 வயது அப்துல் கையூம் என்கிற பாகிஸ்தான் பஸ் ஓட்டுநர் சொல்லும்போது ‘ இவரைப்போன்ற மனிதர்கள் இல்லாவிட்டால் உலகம் அழிந்துவிடும்.நாங்கள் பிரார்த்திக்கிறோம்.அல்லா அவரை காப்பார்’ என்கிறார்.இன்ஷா அல்லா.