இவர் தான் நன்றாக முத்தம் கொடுப்பார்! உண்மையை போட்டு உடைத்த ஆல்யா மானசா

  0
  3
  alya manasa

   பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா, தனக்கு சிறந்த லிப் கிஸ் வழங்கும் நபர் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்

  சென்னை: பிரபல சீரியல் நடிகை ஆல்யா மானசா, தனக்கு சிறந்த லிப் கிஸ் வழங்கும் நபர் குறித்த சுவாரஸ்ய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்

  விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், “ராஜா ராணிசீரியலில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. இந்த சீரியலின் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் பல லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். முன்னதாக மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்தார்.

  இதையடுத்து ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திகை ஆல்யா மானசா காதலித்து வருகிறார். இதை இருவருமே உறுதி செய்து பல நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

  alya sanjeev

  இந்நிலையில் இணையதள ஊடகம் ஒன்று நடத்திய விருது விழாவில் பங்குக்கேற்ற பொழுது ஆல்யாவிடம் உங்கள் இருவரின் யார் நன்றாக முத்தம் கொடுப்பார்? என்று ஒரு கேள்வியை கேட்க,அதற்கு ஆல்யா சற்றும் கூச்சம் இன்றி சஞ்சீவ் தான் என வெளிப்படையாக உண்மையை போட்டு உடைத்தார்.