இளவட்டமாக இருந்தா கொரோனா வராதா? உண்மையை சொல்லும் புள்ளிவிவரம்…

  0
  2
  மூத்த குடிமக்கள்

  நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 83 சதவீதம் பேர் 60 வயதுக்கு குறைவானவர்கள் என்ற தகவல் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரம் வாயிலாக தெரியவந்துள்ளது.

  கொரோனா வைரஸ் பரவுவது  தொடர்பாக மக்கள் ஆரம்பத்தில் அலட்சியம் காட்டி வந்த மக்கள் தற்போது அதன் தீவிரத்தை பார்த்தை கடும் அச்சசத்தில் உள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை கொரோனா வைரஸ் எளிதாக தாக்கும் அபாயம் உள்ளது. அதனால் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எச்சரிக்கை செய்தனர்.

  கொரோனா வைரஸ்

  ஆனால் உண்மை நிலவரம் என்னவோ வேறுவிதமாக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, நம் நாட்டில் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 83 சதவீதம் பேர் 60 வயதுக்கு குறைவானவர்கள் என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. மேலும், அதில் 41 சதவீதம் 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  21-40 வயதுக்கு உட்பட்டவர்கள்

  கொரோனா பாதித்தவர்கள்      பங்களிப்பு
  60 வயதுக்கு மேல்                       17 சதவீதம்
  41-60 வயது வரை                         33 சதவீதம்
  21-40 வயது வரை                          41 சதவீதம்
  00-20 வயது வரை                          09 சதவீதம்