இளம் பெண்ணை ஏமாற்றிய நீயா நானா கோபிநாத்! பாதிக்கப்பட்ட பெண் வெளியிட்ட வீடியோ!

  0
  42
  Gopinath

  நிஜ முகங்களை தோலுரித்து காட்டுகிறேன், சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுகிறேன் என்று நீயா? நானா நிகழ்ச்சியில் அறிமுகமாக, நல்ல சமூக ஆர்வலராகவும் பெயர் பெற்றார் கோபிநாத்.

  ‘ மேடையில் பேசுறதை எல்லாம் ஒரு பேச்சா எடுத்துக்கிட்டு வந்து நிற்கறீயேப்பா?’ என்று நிறைய அரசியல் தலைவர்கள், சினிமா கலைஞர்களின் வீட்டு காவலாளி கிராமத்தில் இருந்து தங்கள் அபிமான தலைவரைப் பார்க்க கிளம்பி வரும் ரசிகர்களைப் பார்த்து கேட்பார்கள். இவர்களை எல்லாம் நிஜ முகங்களை தோலுரித்து காட்டுகிறேன், சமூக பிரச்சனைகளுக்கு தீர்வு தேடுகிறேன் என்று நீயா? நானா நிகழ்ச்சியில் அறிமுகமாக, நல்ல சமூக ஆர்வலராகவும் பெயர் பெற்றார் கோபிநாத். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு நீயா நானா கோபிநாத் என்கிற பெயரே ரசிகர்களின் மனதில் நிலைத்தது. 

  Gopinath

  தன்னை எப்போதும் நேர்மையாளராக அடையாளப்படுத்திக் கொள்ளும் கோபிநாத், பேசுவது எல்லாமே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மட்டும் தான். ஆனால், அவரும் மற்ற சினிமா, அரசியல் பிரபலங்களைப் போல நிகழ்ச்சி முடிஞ்சதும் தன்னுடைய சுய ரூபத்தைத் தான் வெளிப்படுத்தியுள்ளார் என்று புகார் சொல்லி ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் அந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட இளம் பெண் ஒருவர். 
  இது குறித்து தனது புகாரையும், வேண்டுகோளையும் வீடியோவாக வெளியிட்டிருந்த அந்த பெண், அந்த வீடியோவில், நீயா நானா நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்திருந்தேன்.

  Gopinath

  அப்போது அந்த நிகழ்ச்சியில், என்னுடைய தாத்தா 60 வயது வரையும் மூட்டை தூக்கி தான் தன்னை படிக்க வைத்ததாகவும், எனினும், கல்லூரி படிப்பை முடிக்க என்னிடம் போதிய பண வசதி இல்லை என்றும் நிகழ்ச்சியில் கூறியிருந்தேன். உடனே எவ்வளவு பணம் கட்ட வேண்டும், அந்த செலவுகளை நான் கட்டுகிறேன் என்று கோபிநாத் அனைவரின் முன்னிலையிலும் நிகழ்ச்சியில் சொல்லியிருந்தார். எனினும், இது வரை எந்த உதவிகளும் அவரிடம் இருந்து எனக்கு கிடைக்கவில்லை.

  Girl

  நான் என்னுடைய கல்லூரிப் படிப்பைத் தொடராமல் விட்டு விட்டேன். அவர் உதவி செய்யாதது பரவாயில்லை. அவருக்கு எதிர்பாராத வேறு சிக்கல்கள் வந்திருக்கலாம். ஆனால், தயவு செய்து உங்களால் உதவி செய்ய முடியவில்லை என்றால், மேடையில், ‘நான் உதவி செய்கிறேன்’ என்று ஆசைவார்த்தைச் சொல்லி யாரிடமும் போலியாய் வாக்குறுதி தராதீர்கள்” என்று வெளியிட்டிருக்கிறார். 
  நீயா நானா நிகழ்ச்சியில், கோபிநாத் உதவி செய்கிறேன் என்று கூறும் காட்சிகளும், அந்த பெண் வெளியிட்டுள்ள வீடியோவும் தற்போது வைரலாக பரவி வருகிறது.