இளம்பெண்ணை அரை நிர்வாணமாக அடித்து உதைத்த ஊர்மக்கள்: பதற வைக்கும் வீடியோ!

  0
  1
  இளம்பெண்

  அந்த பெண் பிஹாலா சமூகத்தைச் சேர்ந்தவர், இளைஞர் பீல் சமூகத்தைச் சேர்ந்தவர்

  மத்தியப் பிரதேசம் : வேறு சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த இளம்பெண்ணை ஊர்மக்கள் அடித்து அரை நிர்வாணமாக அழைத்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  love

  மத்தியப் பிரதேசம் மாநிலம் அலிராஜ்புர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண்ணை அப்பகுதிவாசிகள்  அரை நிர்வாணக் கோலத்தில் அடித்து உதைக்கும் வீடியோ காட்சி ஒன்று சமூகவலைதளங்களில் வெளியானது. அப்பெண்ணை அடித்து இழுத்துச் செல்ல காரணம்  அதன்பிறகு தெரியவந்தது. அப்பெண் வேறுசமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவருடன் ஊரைவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

   

  இதனால் அந்த பெண்ணை அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார்,  இந்த விவகாரம் குறித்து யாரும் புகார் அளிக்க முன்வரவில்லை. அந்த பெண் பிஹாலா சமூகத்தைச் சேர்ந்தவர், இளைஞர் பீல் சமூகத்தைச் சேர்ந்தவர். இதனால் சாதி மாறி காதலித்ததால் அந்த பெண் தாக்கப்பட்டுள்ளார். வீடியோவில் உள்ள பெண் யார் என்று விசாரணை விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார்.