இலங்கை அதிபர் தேர்தல் – நவம்பர் 16

  0
  4
  இலங்கை அதிபர் தேர்தல் - நவம்பர் 16

  இலங்கையில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

  இலங்கையில் அதிபர் தேர்தல் நவம்பர் 16 ஆம் தேதி நடைபெறுவது குறித்து தேர்தல் ஆணையர் மஹிந்த தேஷப்பிரியா அறிவித்துள்ளார். இதற்கான வேட்பு மனுக்களை அக்டோபர் 7ஆம் தேதி முதல் சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.\கோத்தபாய ராஜபக்சே

  இலங்கையின் பொதுஜன முன்னணியின் சார்பில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சே போட்டியிடுவதாக முன்பு அறிவித்திருந்தார். அதிபர் மைத்ரிபால சிறீசேனாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2020) ஜனவரி-8 ஆம் தேதியுடன் முடிவடையவுள்ள நிலையில் அவரும்   போட்டியிட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. மேலும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க போட்டியிட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகிறது.மைத்ரிபால சிறீசேனா மற்றும் ரணில் விக்ரமசிங்க