இலக்கை நோக்கி அரசு பலத்தோடு உழைப்போம்! – தொண்டர்களுக்கு விஜயகாந்த் கடிதம்!

  0
  9
  விஜயகாந்த்

  எதற்காக தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்கை அடைய அசுர பலத்தோடு உழைத்து வெற்றி பெறுவோம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
  தே.மு.தி.க கட்சியின் கொடி உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆவதையொட்டி ரசிகர்களுக்கு விஜயகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

  எதற்காக தே.மு.தி.க ஆரம்பிக்கப்பட்டதோ அந்த இலக்கை அடைய அசுர பலத்தோடு உழைத்து வெற்றி பெறுவோம் என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

  kanth

  தே.மு.தி.க கட்சியின் கொடி உருவாக்கப்பட்டு 20 ஆண்டுகள் ஆவதையொட்டி ரசிகர்களுக்கு விஜயகாந்த் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
  “2000ம் ஆண்டு நம் ரசிகர் மன்றத்திற்குக் கொடி வேண்டும் என்ற ரசிகர்களின் விருப்பத்தை ஏற்று பிப்ரவரி 12, 2000ம் ஆண்டு சிவப்பு, மஞ்சள், கருப்பு என்ற மூவர்ணத்தில் நீலநிறத்தில் ஜோதியை கையில் ஏந்திய நம் கொடியினை அறிமுகம் செய்தோம்.
  2005ம் ஆண்டு நமது ரசிகர் மன்றம், தேசிய முற்போக்கு திராவிடா கழகமாக மாறியபோதும், ரசிகர் மன்ற கொடியை கழக கொடியாக மாற்றி, நம் கொடிகள் இல்லாத கிராமமே இல்லை என்ற சாதனை படைத்த அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு இந்த நேரத்தில் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்

  vijayakanth

  இந்த 20 ஆண்டுகளில் எத்தனையோ வெற்றிகளையும், தோல்விகளையும், துரோகங்களையும், சூழ்ச்சிகளையும், சோதனைகளையும் சந்தித்த போதும் எதற்கும் மனம் தளராத என் படைத் தளபதிகளாக இருப்பவர்களே என்னுடன் உறுதுணையாக நம்பிக்கையாக பக்கபலமாக இருக்கிறார்கள். இவர்களால் தான் என்றுமே நமது கழகம் வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருகிறது. இனிவரும் காலங்களிலும் லஞ்சம், ஊழலற்ற, நேர்மையான, தைரியமான அனைவருக்கும் சமமான வாழ்வு அளிக்கும் தமிழகத்தை உருவாக்க வீறு நடை போடுவோம். எந்த நோக்கத்திற்காக நம் கொடி அறிமுகப்படுத்தப்பட்டதோ நம் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அந்த இலக்கை நோக்கி நாம் அசுர பலத்துடன் உழைத்து வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.