இறைச்சிக் கடைக்காரர்களுக்கு செவிசாய்ந்த சென்னை மாநகராட்சி! திங்கட்கிழமை மட்டுமே விடுமுறை!!

  0
  6
  இறைச்சிக்கடை

  சென்னையில் நாளை முதல் ஏப்ரல் 12 ஆம் தேதி வரை இறைச்சிக் கடைகளை மூடுமாறு சற்று நேரத்திற்கு முன்பு சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. மக்கள் கூடுவதை தடுக்கும் வகையில் கடைகள் மூடப்படுவதாக அறிவித்தது. மேலும் இறைச்சிக் கடைகளில் மக்கள் கூட்டமாக நிற்பதாகவும், இது கொரோனா பரவ வழிவகுக்கும் என்பதால் மூடப்படுவதாகவும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் விளக்கமளித்தார். 

  இறைச்சிக்கடை

  இந்த அறிவிப்பு இறைச்சிக்கடை விற்பனையாளர்களுக்கு பேரிடியாய் விழிந்தது. காரணம் இறைச்சிக்கடைக்காரர்கள் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று அந்த வாரத்திற்கு தேவையான அனைத்து ஆடு, கோழிகளையும் வாங்குவது வழக்கம். அதன்படி, வட்டிக்கெல்லாம் கடன் வாங்கி இறைச்சிக்கடை காரர்கள் ஒருவாரத்திற்கு தேவையான இறைச்சிகளை இன்று காலை வாங்கி குவித்தனர். திடீரென இறைச்சிக்கடைகளை மூட வேண்டும் என்று வந்த அறிவிப்பு அவர்களை கலக்கத்திற்கு உள்ளாக்கியது. காரணம் ஒரு வாரத்திற்கு வாங்கிய ஆடு, கோழிகள் ஏப்ரல் 12 ஆம் தேதிவரை இருக்காது. இதனால் இறைச்சிக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவை திரும்பிப்பெறவேண்டும் என கடைக்காரர்கள் சென்னை மாநகராட்சியிடம் வலியுறுத்தினர். 

  ttn

  இதனையடுத்து சென்னையில் இறைச்சிக்கடைகள் வரும் திங்கட்கிழமை மட்டும் மூடப்படும் என்றும்  பிற நாட்களில் இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் சென்னை மாநகராட்சி தற்போது அறிவித்துள்ளது. மேலும் சமூக விலகலை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் அவ்வாறு கடைபிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.