இறுதிப் போர் நேரத்தில் காணாமல் போனவர்கள் செத்துவிட்டார்கள்! – இலங்கை அதிபர் அதிர்ச்சி தகவல்

  0
  6
  கோத்தபய ராஜபக்சே

  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன, 20 ஆயிரம் தமிழர்கள் இறந்துவிட்டதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மிகக் கடுமையான போர் நடந்தது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தனர்

  இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும் ராணுவத்துக்கும் நடந்த இறுதிக்கட்ட போரின்போது காணாமல் போன, 20 ஆயிரம் தமிழர்கள் இறந்துவிட்டதாக கோத்தபய ராஜபக்சே கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  2009ம் ஆண்டு இலங்கை ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே மிகக் கடுமையான போர் நடந்தது. இதில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இறந்தனர். பல ஆயிரக் கணக்கானோர் காணாமல் போகினர். இவர்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் குடும்பத்தினர் காணாமல் போன தங்கள் உறவினர்களைக் கண்டுபிடித்துத் தர வேண்டும் என்றும் சட்ட ரீதியான போராட்டங்களை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர். 

  gothapaua

  இந்தநிலையில் இலங்கைக்கு வந்த ஐ.நா உயர் அதிகாரி ஹனாஸ் சிங்கர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார். அப்போது, இலங்கை போர் சமயத்தில் காணாமல் போன 20 ஆயிரம் தமிழர்கள் பற்றிய கேள்வி எழுந்தது. அதற்கு கோத்தபய, “பெரும்பாலான தமிழர்களை விடுதலைப் புலிகள் கடத்தி தங்கள் படையில் சேர்த்துக்கொண்டார்கள். அதற்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரே சான்று. அவர்கள் இறந்துவிட்டார்கள். உரிய விசாரணை நடத்தப்பட்டு காணாமல் போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்” என்று கூறியதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

  war

  உண்மையில், காணாமல் போனவர்கள் பெரும்பாலானவர்கள் இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தவர்கள் என்று அவர்களது குடும்பத்தினர் கூறுகின்றனர். ராணுவத்திடம் சரண் அடைந்தவர்களை இறந்தவர்கள் என்று எப்படிக் கூறலாம்…. இதை ஏற்க முடியாது என்று காணாமல் போனவர்களின் உறவினர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்களுக்கு என்ன நடந்தது என்று அரசு விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
  2017ம் ஆண்டு அப்போது ஜனாதிபதியாக இருந்த மைத்ரிபால ஶ்ரீசேனா, இலங்கை ராணுவத்திடம் சரண் அடைந்தவர்கள் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்றால். ஆனால், இதுவரை அந்த பட்டியல் வெளியாகவில்லை.

  sena

  ஐ.நா மனித உரிமை அமைப்பிடம் ஒப்புக்கொண்டது போல, காணாமல் போனவர்கள் பற்றிய தகவலை அறிவதற்காகக் குழு ஒன்றை இலங்கை அரசு 2018ம் ஆண்டு அமைத்தது. அதில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போய் உள்ளதாக புகார்கள் வந்துள்ளது. தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய கோத்தபய ராஜபக்சே, நாட்டுக்காக போராடியவர்கள் பற்றி உலக நாடுகள் அமைப்பிடம் அதையும் வெளிப்படுத்தமாட்டோம் என்று கூறியிருந்தார். தற்போது, காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என்று கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.