இறுதிச்சடங்கு செய்யும்போது உயிர்த்தெழுந்த அதிசம் ! மீண்டும் வாழ்வதற்கு வாய்ப்பளித்த கடவுள் !

  0
  2
  dead man live

  ஒரிசா மாநிலத்தில் உயிரிழந்து விட்டதாக கருதி அடக்கம் செய்யும் நேரத்தில் ஒருவர் உயிர்த்தெழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  ஒரிசா மாநிலத்தில் உயிரிழந்து விட்டதாக கருதி அடக்கம் செய்யும் நேரத்தில் ஒருவர் உயிர்த்தெழுந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

  ஒரிசா மாநிலம் கஞ்ச் மாவட்டம் கபகல்லா கிராமத்தில் மாலிக் என்பவர் ஆடு, மாடு மேய்க்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

  orissadeadbody

  2 தினங்களுக்கு முன்னர் மாலிக் மேய்க்கும் ஆடு, மாடுகள் மட்டும் தானாக வீட்டிற்கு வந்த நிலையில் அவர் காணாமல் போய்விட்டார். இதையடுத்து உறவினர்களால் தேடப்பட்டு வந்த மாலிக் காட்டுப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டார். அவர் மயங்கி இருந்ததை பார்த்த உறவினர்கள் அவர் இறந்து விட்டதாக கருதி இறுதிச் சடங்கு செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே மாலிக்கின் உடலில் ஏதோ அசைவுகள் ஏற்பட்டுள்ளது. தலையை அசைத்துள்ளார். இதனால் பயந்து போன உறவினர்கள் அவரின் நாடித் துடிப்பை பிடித்து பார்த்தனர். அப்போதுதான் அவருக்கு உயிர் இருப்பதை தெரிந்து கொண்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடுமையான காய்ச்சல், உடல் வலியால் மாலிக் மயக்கம் அடைந்து விழுந்துள்ளார். இது தெரியாத கிராம மக்கள் அவரை மருத்துவமனைக்க அழைத்து செல்லாமல் மயானத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். கொஞ்சம் தாமதித்திருந்தாலும் தகனம் செய்ய தீ வைத்திருந்தால் சூடு தாங்காமல் அய்யோ, அம்மா என்று அலறியடுத்துக் கொண்டே உயிரிழந்திருப்பார் மாலிக்.