இறந்த மனைவியின் உடலை சாலையில் வைத்து போராட்டம் நடத்திய மருத்துவர்: கோவையில் நடந்த சோக சம்பவம்!

  0
  1
  விபத்து

  இறந்த தனது மனைவியின் உடலோடு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மருத்துவர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  கோவை : இறந்த தனது மனைவியின் உடலோடு, பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மருத்துவர் ஒருவர் போராட்டம் நடத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

  கோவை மருத்துவர் ரமேஷ். சமூகப்பணியில் தீவிரமாக முனைப்பு காட்டி வரும் இவர் அங்குள்ள மக்கள் மத்தியில் நல்ல பரிச்சயமானவர். இந்நிலையில் நேற்று மருத்துவர் ரமேஷின் மனைவி  ஷோபனா  மகளை பள்ளியிலிருந்து அழைத்து வரும் போது  ஆனைக்கட்டி மலைப்பகுதியில் வந்து கொண்டிருந்தார். அங்கு அருகிலேயே டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருவதால் அப்பகுதியில்  வாகனங்கள் தாறுமாறாகவே செல்லும். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டி வந்த ஆசாமி ஒருவர், ரமேஷின் மனைவி மீது மோத மருத்துவர் ரமேஷ்  மனைவி மரணமடைந்தார். அவரது மகள் கடுமையான விபத்தின் காரணமாகக் கால் எலுப்புகள்  கை,  முகம் என கடுமையாகப் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அவசர சிகிச்சைப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  ரமேஷ்

  இந்த சோகமான சம்பவம் நடைபெற்ற நிலையில் சற்றும் கலங்காத மருத்துவர் ரமேஷ், மகளின் சிகிச்சை பற்றி கூட அறிந்து கொள்ளாமல்,  மனைவியியின் உடலோடு அப்பகுதி மக்களோடு டாஸ்மாக் கடையை அகற்ற சாலையில் இரவு வரை போராட்டம் நடத்தினார். டாஸ்மாக் கடை நீக்கப்படும் என்ற உறுதிக்கு பின்பே மனைவியின் உடலை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று பிரேத பரிசோதனை செய்ய அனுமதித்தார். அதே சமயம் காலை 3 30 மணிக்கு தன் மகளை மருத்துவமனையில் காண  கதறலோடு சென்றார்.  

  எந்த ஒரு போராட்டமென்றாலும் கணவனோடு கை கோர்த்த அவரது மனைவி இன்று அவரது உடலையே சமூகத்திற்கான ஆயுதமாக மாற்றினார் என்று அப்பகுதி மக்கள் கண்ணீருடன் கூறி  வருகின்றனர்.