‘இறந்த தாயும் வறண்ட ஏரியும்’ -அம்மாவை நினைத்து கண்ணீர் விடாமல் தண்ணீர் விடும் விவசாயி..

  0
  13
  விவசாயி

  பொதுவாக இறந்தவரை நினைத்து கண்ணீர் விடுவதும் ,காரியம் செய்வதும் பிறகு அவரை மறந்துவிட்டு வேலையை பார்ப்பதும் எல்லோரும் செய்கின்ற விஷயம் .ஆனால் ஒரு விவசாயி இறந்த தன் அம்மாவால்  ஒரு கிராமம் பயனடைய செய்ய ஒரு ஏரியை தூர்வார முடிவுசெய்து புரட்சி செய்த விஷயம் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது 

  kanchi

  காஞ்சிபுரம் மாவட்டம் குரும்பறை கிராமத்தை சேர்ந்த 52 வயது விவசாயி கருணாகரனின் தாயார் இரண்டு வாரங்களுக்கு முன்பு நோய் வாய்ப்பட்டு இறந்து விட்டார் .வழக்கமாக இறந்த அம்மாவை நினைத்து கண்ணீர் விட்டுக்கொண்டிருக்காமல் அந்த விவசாயி அந்த ஊர் மக்களுக்கு பயன்படும்படி ஒரு நல்ல காரியம் செய்தார் .
  ஆம் அந்த கிராமத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவிலிருக்கும் ஏரியை தூர் வாரி அநத ஊர் மக்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடிவு செய்தார் .அதனால் அந்த விவசாயி அந்த ஏரியின் அருகே இறந்த தன் அம்மாவின் போட்டோவை வைத்துக்கொண்டு இயந்திரத்தின் மூலம் இரண்டு வாரங்களாக தூர் வாரிக்கொண்டிருக்கிறார் ,இவரின் சேவைக்கு உறுதுணையாக அந்த ஊர் மக்களும் அவரோடு கைகோர்த்துக்கொண்டு பணியாற்றுகிறார்கள் .

  kanchi

  இந்த பணியால் அந்த கிராமத்தில் இப்போது கரும்பு பயிரிட்டிருக்கும் நிலம் பலன் பெரும் .அதற்கு தண்ணீர் கிடைக்குமென அந்த ஊர் விவசாயிகள் கூறினார்கள் .மேலும் குடிநீரின்றி கஷ்டப்படும் அந்த ஊர் இனி தண்ணீர் பிரச்சினையில்லாமல் இருக்கும் .இப்படி அனைவரும் அந்தந்த ஊரிலுள்ள நீர்நிலைகளை மீட்டெடுத்தால் நாட்டில் தண்ணீர் பிரச்சனை தீருமென அந்த ஊரை சேர்ந்த  பலர் கூறினர்