இறந்த தாயின் சடலத்தை குப்பையில் வீசிய மகன்: அதிர்ச்சி தரும் சம்பவம்!

  0
  4
  மாதிரிபடம்

  இறந்த தாயின் உடலை  குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தூத்துக்குடி: இறந்த தாயின் உடலை  அடக்கம் செய்ய பணம் இல்லாததால்  குப்பை தொட்டியில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

  தூத்துக்குடியில் தனசேகரன் நகர் பிரதான சாலையில்  உள்ள குப்பை தொட்டியில் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் குப்பையில் கிடந்த சடலம்  நாராயணசாமி என்பவரின் மனைவி வசந்தி என்பது தெரியவந்தது. 

  murder

  இதுகுறித்து வசந்தியின் மகன் முத்து லட்சுமணனை  போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் முத்து  லட்சுமணன் கூறிய காரணம் போலீசாரை  அதிர வைத்தது. உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட வசந்தி இறந்துள்ளார். அவரை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் முத்து லட்சுமணன் பரிதவித்துள்ளார். ஒருகட்டத்தில் செய்வதறியாது திகைத்த முத்து  லட்சுமணன் தாயின் உடலை  குப்பை தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

  tuticorin

  இதையடுத்து  வசந்தியின்  உடலை பிரேத பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இருப்பினும் தொடர்ந்து முத்து லட்சுமணனை போலீசார் விசாரித்து வருகின்றனர். பணம் இல்லாததால் பெற்ற  தாயின் உடலை மகனே குப்பையில் வீசிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.