இரும்பு சத்துக்களை அதிகரிக்கும் மரவள்ளிக்கிழங்கு அடை

  0
  1
  மரவள்ளிக்கிழங்கு அடை

  மரவள்ளிக்கிழங்கை அப்படியே கொடுத்தால், சாப்பிடுவதற்கு மறுக்கும் குழந்தைகள், அவர்களைத் தூண்டும் விதமாக மரவள்ளிக்கிழங்கு அடை செய்து தரலாம். 

  maravalli kilagu adai

  நல்ல சத்தான, ஆரோக்கியம் தரும் உணவு வகைகள் பெரும்பாலும் குழந்தைகளுக்கு பிடிப்பதே இல்லை’ என்பதே பெரும்பாலான பெற்றோர்களின் புலம்பல்களாக இருக்கிறது. இந்த விஷயத்தில் தவறு நம் மீது தான் இருக்கிறது. அவர்களுக்கு பிடித்த மாதிரி சத்தான உணவுகளை நாம் தான் பரிமாற தவறிவிடுகிறோம். மரவள்ளிக்கிழங்கை அப்படியே கொடுத்தால், சாப்பிடுவதற்கு மறுக்கும் குழந்தைகள், அவர்களைத் தூண்டும் விதமாக மரவள்ளிக்கிழங்கு அடை செய்து தரலாம். 
  தேவையான பொருட்கள்
  புழுங்கல் அரிசி       – 1/2கிலோ
  உளுத்தம் பருப்பு      -100கிராம்
  மரவள்ளிக்கிழங்கு    -1/2கிலோ
  வரமிளகாய்                – 4
  பெருங்காயப்பொடி -1/4டீஸ்பூன்
  கறிவேப்பிலை        – 1/4கப் (பொடியாக நறுக்கியது)
  உப்பு                 – தேவைக்கேற்ப

  செய்முறை

  maravalli kilagu adai

  மரவள்ளிக்கிழங்கு தடித்த தோலுடன் இருக்கும். இதன் கனத்த தோலை நீக்கி, நரம்புகளை எடுத்து சிறிய சிறிய துண்டுகளாக  நறுக்கி வைத்துக் கொள்ளவும். புழுங்கல் அரிசி, உளுத்தம் பருப்பை இரண்டையும் ஊற வைத்து, அத்துடன் கிழங்கு துண்டுகள், வரமிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்தெடுக்கவும். உப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை கலந்து இப்போது பொன்னிற தோசையாக வார்க்கவும். குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவார்கள். இந்தக் கலவையைப் பயன்படுத்தி தோசை வார்க்கும் போது நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி வார்த்தால் கூடுதல் சுவையும் மணமும் கிடைக்கும். சத்துக்களும் அதிகரிக்கும்.