இருந்தவரை கைதூக்கிவிட்டார்; இறந்தவரை தோளில் தூக்கினார்- வெல்டன் ஸ்ம்ரிதி இராணி

  0
  1
  Smirti Irani

  இதுநாள்வரை தன் நம்பிக்கைக்குரிய செயலராக இருந்து தனக்கு எல்லா வகையிலும் உதவியாய் இருந்த சுரேந்தர் சிங்குக்கு, ஸ்மிருதி இராணி தன் இறுதி மரியாதையை செலுத்தவும்; இதுநாள் வரை தனக்கு வலதுகையாக இருந்து உதவியதற்கு நன்றி கூறவும் டெல்லியில் இருந்து அவசரமாக அமேதி  திரும்பினார்.

  நாடாளுமன்ற அமேதி தொகுதி வெற்றி வேட்பாளரும், பாஜகவின் முக்கிய முகங்களில் ஒருவருமான ஸ்மிரிதி இரானியின் தனிச்செயலர் சுரேந்தர் சிங் இன்று காலை மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார். கொலைச் செய்தி ஸ்மிரிதிக்கு கிடைத்தபோது அவர், டெல்லியில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் பங்கேற்று இருந்தார்.

  Smriti Irani

  இதுநாள்வரை தன் நம்பிக்கைக்குரிய செயலராக இருந்து தனக்கு எல்லா வகையிலும் உதவியாய் இருந்த சுரேந்தர் சிங்குக்கு, ஸ்மிருதி இராணி தன் இறுதி மரியாதையை செலுத்தவும்; இதுநாள் வரை தனக்கு வலதுகையாக இருந்து உதவியதற்கு நன்றி கூறவும் டெல்லியில் இருந்து அவசரமாக அமேதி  திரும்பினார்.

  Smriti Irani

  நேராக துக்க வீட்டுக்கு சென்றவர், ஃபார்மாலிட்டிக்காக வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு, மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்திவிட்டு, அங்கிருந்து கிளம்பவில்லை. மாறாக, சுரேந்தர் சிங்கின் இறுதி யாத்திரை கிளம்பும்வரை காத்திருந்து, அவருடைய பூத உடலை முன் வரிசையில் நின்று நான்கில் ஒருவராக சுமந்து சென்று தன் நன்றியை காட்டி, சுரேந்தர் சிங் குடும்ப உறுப்பினர்களையும், கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் நெகிழ்ச்சி படுத்தியுள்ளார் ஸ்மிருதி ராணி. 

  உதவியாளராக இருந்தவரைக்கும் கை கொடுத்து தூக்கி விட்டவர், அவர் இறந்த பின் தோள் கொடுத்து தூக்கி விட்டது நிச்சயம் பாராட்டுக்குரிய விஷயம்.