‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’ ஆரம்பமானது!

  0
  3
  இருட்டு அறையில் முரட்டு குத்து

  இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரித்தது.

  நடிகர் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது.

  iamk

  தமிழ் சினிமாவில் ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமானவர் சந்தோஷ் பி.ஜெயக்குமார். அதைத்தொடர்ந்து  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கினார்.  இதில் இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தை ப்ளூ கோஸ்ட் பிக்சர்ஸ் தயாரித்தது. இதில் கவுதம் கார்த்திக், வைபவி ஷாண்டில்யா, யாஷிகா ஆனந்த், சந்திரிகா ரவி, ஷாரா, கருணாகரன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ஜான் விஜய், மதுமிதா ஆகியோர் நடித்திருந்தனர் அடல்ட் காமெடி படமாக வெளியான இப்படம் சூப்பர் ஹிட் அடித்தது. 

  iamk

  இந்நிலையில், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தின் இரண்டாம் பாகம் தொடங்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது.  ஃபான்டஸி ஜானரில் புதிய கதையம்சத்துடன், புதுமுக நடிகர் நடிகைகளுடன் இப்படம் உருவாகவுள்ளதாகப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் தெரிவித்துள்ளார். விரைவில் இப்படம் குறித்த அப்டேட்டுகள்  வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.