இருசக்கர வாகனத்திற்கு வழி விடாததால் கத்திகுத்து! பாஜகவினரின் அராஜகம்

  0
  6
  representative image

  இருசக்கர வாகனத்திற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறால் கத்திக்குத்தை ஏற்படுத்தி பம்மல் பாஜக நகர தலைவர் அராஜகம் செய்தார்.

  இருசக்கர வாகனத்திற்கு வழி விடாததால் ஏற்பட்ட தகராறால் கத்திக்குத்தை ஏற்படுத்தி பம்மல் பாஜக நகர தலைவர் அராஜகம் செய்தார்.

  சென்னை பல்லாவரம் அடுத்த நாகல்கேணி பகுதியை சேர்ந்தவர் நந்தா (19) இவர் தனியார் கல்லூரியில் படிக்கும் இவரும் இவரது நண்பர் விக்னேஷ்(16) என்பவரும் நேற்றிரவு குரோம்பேட்டையில் நடைபெற்ற மாதா கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். வரும் வழியில் நித்யானந்தம் என்பவர் வழியை மறித்து நின்றிருந்தார். வழிவிடாமல் நின்றுக்கொண்டிருந்த நித்தியானந்தனின் கையை பிடித்து இழுத்து தள்ளிவிட்டு நந்தாவும், விக்னேஷும் சென்று விட்டனர். மீண்டும் இரவு இருவரும் வரும் போது நித்யானந்தமும் அவரது தந்தையான பாஜக பம்மல் நகர தலைவர் மதன்(42) இருவரும் நாகல்கேணி அருகே வழிமறித்து இரும்பு ராடு மற்றும் கத்தியால் நந்தாவையும், விக்னேஷையும் சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியும் உள்ளனர்.

  இதில் இருவருக்கும் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நந்தாவிற்கு மூன்று இடங்களில் 9 தையல் போடப்பட்டுள்ளது. விக்னேஷ் மட்டும் ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். இதையடுத்து நித்தியானந்தம் மற்றும் அவரது தந்தை மதன் ஆகிய இருவரையும் சங்கர் நகர் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.