இருசக்கர வாகனங்களுக்கு புதிய விதிகள்! மத்திய அரசின் அடுத்த அதிரடி

  0
  6
  இருசக்கர வாகன ஓட்டிகள்

  சாலைகளில் விதிமீறல்களால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும், சாலைகளில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வந்தது.

  சாலைகளில் விதிமீறல்களால் ஏற்படும் உயிர் இழப்புகளை தவிர்க்கவும், சாலைகளில் ஒழுக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் மோட்டார் வாகன சட்டத்தில் மத்திய அரசு திருத்தங்கள் மேற்கொண்டது. இந்த புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த மாதம் 1ம் தேதி அமலுக்கு வந்தது. புதிய சட்டத்தில், சிறு வாகன விதிமீறல்களுக்கான அபராத முன்பு இருந்ததை காட்டிலும் பல மடங்கு உயர்த்தப்பட்டது.

  இந்நிலையில் மோட்டார் வாகன சட்டத்திருத்ததின் ஒரு பகுதியாக இருசக்கர வாகனங்களுக்கு வரும் அக்‌டோபர் மாதம் முதல் புதி‌ய விதிகளை நடைமுறைப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்மூலம்இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பாதுகாப்புடன் பயணிக்க முடியும் எனவும், விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்புகள் குறையும் என்றும் மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. 

  இருசக்கர வாகன ஓட்டிகள்

  அதன்படி,  “இருசக்கர வாகனங்களில் முகப்பு விளக்கு, நம்பர் பலகை கட்டாயம் இருக்கவேண்டும், இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவ‌சம் அணிவது அவசியம், பின் இருக்கையில் அமர்பவர்கள் கால் வைக்க புட்‌ ரெஸ்ட் இருக்க வேண்டியது அவசியம், பின் சக்கரத்தை‌ பாதியாக மறைக்கும் வரை மட் கார்ட் பொருத்த வேண்டும். பின்னால் அமர்ந்திருப்பவர்களின் பாதுகாப்பிற்காக இருக்கையை ஒட்டி கைப்பிடி அமைக்க வேண்டும்” உள்ளிட்டவை இருக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இவ்வாறு இல்லாத இருசக்கர வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.