இரவுகளில் வீட்டு வாசலில் இளைஞர் செய்யும் அட்டூழியம்! காவல் நிலையத்தில் புகார்!

  0
  11
  இளைஞர்

  தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் தான் இருக்கிறது என்றால், பெட்ரோல் விலை அதனுடன் போட்டி போட்டுக் கொண்டு ஏறி வருகிறது.  விதவிதமான திருட்டுகளில் ஈடுபட்டு வரும் கும்பல், சமீபமாய் வாகனங்களைத் திருடுவதில் ஈடுபட்டு வந்த நிலையில், பெரிதாய் திருடினால் போலீஸ் நிலையம் செல்வார்கள் என்று யோசித்திருப்பார்கள் போல, வாகனங்களை எல்லாம் விட்டு விட்டு, வாகனத்தில் நிரப்பப்பட்டிருக்கும் பெட்ரோலைத் திருடிச் செல்கிறார்கள்.

  petrol

  நாகை மாவட்டம் சீர்காழியில், தொடர்ந்து இந்த பெட்ரொல் திருட்டினால் பொதுமக்கள் அவதியுறுகின்றனர். வேலை முடிந்து வீட்டுக்கு வரும் போது, அடுத்த நாள் அலுவலகம் செல்லும் அவசரத்தைத் தவிர்ப்பதற்காக முன் தினமே பெட்ரோல் நிரப்பி வைக்கும் வாகன ஓட்டிகள், அடுத்த நாள் அலுவலகம் செல்லும் வழியிலேயே பெட்ரோல் இல்லாமல் திண்டாடியிருக்கிறார்கள். இது தொடர்கதையாக நடப்பதை அறிந்து, பெட்ரோல் நிரப்புவதைக் குறைத்திருக்கிறார்கள். நாளடைவில், காலையில் வாகனங்கள் எடுக்கும் போது, துளி பெட்ரோல் கூட இல்லாமல் மேலும் அவஸ்தையுடன் புலம்பியிருக்கிறார்கள்.

  petrol

  வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்படும், இருசக்கர வாகனங்களில் தொடர்ந்து பெட்ரோல் மாயமாகி கொண்டே இருந்ததையடுத்து பல வீடுகளில் சிசிடிவி  கேமராக்களைப் பொருத்தி குடியிருப்புவாசிகள் கண்காணிக்க துவங்கினார்கள். அடுத்த நாள் இரவில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் உள்ளே சாவகாசமாய் நுழையும் மர்ம இளைஞர் ஒருவர், சுற்றிலும் நோட்டமிட்டப்படியே அங்கு  நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் இருந்து பெட்ரோலைத் திருடி, தான் கொண்டு வந்துள்ள பாட்டில்களில் நிரப்பிச் செல்கிறார்.  இதனைப் பார்த்து அதிர்ந்துப் போன குடியிருப்புவாசிகள், அந்த சிசிடிவி வீடியோ காட்சிகளுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.