இரவில் உலா வரும் “கொரானா பேய்” -சிசிடிவி கேமெராவில் சிக்கியது -நெட்டிசன்கள்  ரத்தம் உறைந்தது 

  0
  5
  shadowy figure

  சமீபத்தில் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையரில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதியின் ஒரு சி.சி.டி.வி கேமெரா ஒரு வெறிச்சோடிய தெருவில்  ஒரு ஒளியுடன் நடந்து செல்லும் நிழல் உருவத்தைப் படம் பிடித்தது. திடீரென்று ஒரு காரின் பின்னால்  அது தெருவில் நடந்து செல்லும் காட்சியினை பாருங்கள்.

  இந்த வினோதமான காட்சிகள் ரேச்சல் ஜோன்ஸின் பாதுகாப்பு கேமராவில் பிடிக்கப்பட்டன. ஒரு நாள் தனது வீட்டிற்கு வெளியே ஒரு விசித்திரமான சத்தம் கேட்டதால் வெளியே ஓடி வந்து cctv கேமெராவில்  பதிவை பார்த்தபோது அவர் அதிர்ச்சியடைந்த நிலையில் இருப்பதாக அவர் கூறினார்.
  “ஜன்னலுக்கு வெளியே ஒரு ஒளியுடன் ஒரு பேய் உருவம் வருவதை நான் பார்த்தேன் , பின்னர் நான் கேமெரா பதிவைப் பார்த்தபோது அது சாலையில்  நடந்து சென்று காரைக் கடந்து போகும் காட்சியால் நான் முற்றிலும் ஆச்சரியப்பட்டேன், என்  ரத்தம் உறைந்தது  ”என ரேச்சலை லாட்பிபிள் கூறினார்.

  அந்த வீடியோ மார்ச் 26 அன்று  பதிவாகியுள்ளது , கொரோனா வைரஸ் பரவலால்  இங்கிலாந்து ஊரடங்கு  நிலையில் இருக்கும்போது இது நடந்துள்ளது.
  இந்த வீடியோ கிளிப் இப்போது சமூக ஊடக பயனர்களிடையே ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. சி.சி.டி.வி கேமராவில் ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட செயலை பதிவு பண்ணியுள்ளது என்று பலர் நம்புகிறார்கள், சிலர் இது கொரானா உருவத்தில் ஒளிர்வதால் ‘கொரானா பேய்’ என்று  கூறுகிறார்கள். சிலர் இது கிராபிக்ஸ் வீடியோ என்று கூறினர். இது கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் வைரலாகியுள்ள விசித்திரமான சம்பவம் .